IRCTC: ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்த பின்பு இப்படியும் ரீபண்ட் பெறலாம்..!

நாம் திட்டமிட்டு செய்யும் எல்லா வேலைகளும் அதன்படி நடப்பதில்லை. அதுபோலத்தான் நாம் மேற்கொள்ளும் பயணங்களும். குறிப்பாக ரயில் பயணத்துக்காக டிக்கெட் எடுத்து கன்பர்ம் சீட் கிடைத்த பின்னர் அதை கேன்சல் செய்தால் முன்பெல்லாம் கட்டணத் தொகையில் கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படும்.

ரயிலை மிஸ் செய்துவிட்டால் பணம் கிடைக்காமலும் போகலாம். ஆனால் இப்போது சார்ட் தயாராகி கன்பர்ம் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதை ரீபண்டு செய்வதற்காக புதிய சலுகையை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

IRCTC: ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்த பின்பு இப்படியும் ரீபண்ட் பெறலாம்..!

டிக்கெட் டெபாசிட் ரெசிபிட்- டிடீஆர் எனப்படும் Ticket Deposit Receipt (TDR) என்பதுதான் அந்த புதிய வழிமுறை. இதன்படி உரிய காரணங்களுடன் நீங்கள் உங்களது கன்பர்ம்டு டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்டு கிடைக்குமா இல்லையா என்பதை இந்த டிடீஆரை பைல் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த டிக்கெட்டுக்கு ரீபண்டு தருவது முழுக்க முழுக்க மண்டல ரயில்வே டிவிஷனின் முடிவாகும். மண்டல ரயில்வே அலுவலகம் உங்களது காரணத்தை ஏற்றுக் கொண்டால் டிடீஆரில் விண்ணப்பத்தின் படி எவ்வளவு ரீபண்டு கிடைக்கும் என்பது முடிவாகும்.

சார்ட் தயாரானபின் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கு ஆன்லைன் மூலம் டிடீஆர் பைலிங்கை பயணிகள் பயன்படுத்த வேண்டும். ரீபண்டு குறித்து அதில் டிராக் செய்து கொள்ளலாம். ரயில்வே விதிகளின் படி டிடீஆரை பைல் செய்யலாம் என்று ஐஆர்சிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ரீபண்டு செய்யும் முடிவானது சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே அலுவலகம் ரயில்வே விதிகளின்படி தான் முடிவெடுக்கும். ஐஆர்சிடிசிக்கு அதில் தொடர்பில்லை. உங்களது டிக்கெட்டை கேன்சல் செய்தவுடன் டிடீஆரை பைல் செய்யலாம். இ-டிக்கெட்களை ஆன்லைனில் கேன்சல் செய்துவிட்டு டிடீஆரை பைல் செய்ய வேண்டும்.

ரயில்வே நிலைய ரிசர்வேஷன் கவுன்டர்களில் இருந்து டிக்கெட் வாங்கியிருந்தால் அதை உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ரயில் நிலையத்துக்கு சென்று புக்கிங் கவுன்டரில் கேன்சல் செய்துவிட்டு டிடீஆர் பைல் செய்யலாம். குறித்த நேரத்துக்கு ரயில் கிளம்புவதற்கு நான்கு மணிநேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டாலோ அல்லது டிடீஆரை பைல்செய்யாவிட்டாலோ ரீபண்டு கிடைக்காது.

இதுவே ஆர்ஏசி டிக்கெட்கள் என்றால் ரயில் கிளம்புவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக கேன்சல் செய்துவிட்டு டிடீஆரை பைல் செய்யலாம். ஒருவேளை நீங்கள் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எடுத்து சார்ட் தயாராவதற்கு முன்பாக அதை கேன்சல் செய்தால் அதற்கு டிடீஆர் பைல் செய்யத் தேவையில்லை. ரீபண்டு ஆகிவிடும்.

ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் ஆப் மூலம் டிடீஆரை பைல் செய்யும் முறை:

ஸ்டெப் 1: ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் ஆப்பை ஓபன் செய்து லாகின் செய்யவும்.

ஸ்டெப் 2: 'Train' என்பதை செலக்ட் செய்துவிட்டு 'My Bookings'க்கு செல்லவும்.

ஸ்டெப் 3: நீங்கள் கேன்சல் செய்ய வேண்டிய டிக்கெட்டை செலக்ட் செய்து கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: இப்போது மேலே வலதுபுறம் உள்ள மெனு பட்டனை கிளிக் செய்யவும். அதில் 'Cancel' என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: டிக்கெட்டை கேன்சல் செய்தவுடன் 'Train' பேஜின் மெயின் டாஷ்போர்டுக்கு செல்லவும்.

அங்கு 'File TDR' என்பதை கிளிக் செய்யவும். பின்னர் ரயில் டிக்கெட்டை தேர்ந்தெடுத்து எதற்காக டிடீஆரை பைல் செய்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவும். காரணத்தை தெரிவிப்பதற்கு ஒரு ட்ராப் டவுண் மெனு வரும். அதில் உள்ள காரணங்களில் உங்களுக்குப் பொருத்தமானதை செலக்ட் செய்யவும்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிடீஆர் விண்ணப்பத்தை பைல் செய்யும் முறை:

ஸ்டெப் 1: https://www.irctc.co.in/nget/train-search என்ற ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் லாக்இன் செய்யவும்.

ஸ்டெப் 2: உங்களது புக்டு டிக்கெட்ஸ் செக்ஷனுக்குச் சென்று முதலில் டிக்கெட்டை கேன்சல் செய்யுங்கள். பின்னர் 'Services' டேபில் உள்ள 'File Ticket Deposit Receipt (TDR) செக்ஷனுக்குச் செல்லவும்.

ஸ்டெப் 3: இப்போது புதிய இணையப்பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள 'My Transactions' என்ற செக்ஷனில் உள்ள 'File TDR' என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்களது காரணத்தை பதிவிடவும். பின்னர் டிடீஆரை பைல் செய்துவிட்டு 'Submit' பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களது டிடீஆர் பரிசீலிக்கப்பட்டு உரிய கட்டணம் ரீபண்டு ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+