சென்னை: வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் தொடர்பு செயலிகள் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து பெரும்பாலான மக்கள் எஸ்எம்எஸ்-களை பயன்படுத்துவதை குறைத்து விட்டோம். இருந்தாலும் நாம் செய்யக்கூடிய ரீசார்ஜ்கள், வங்கி சார்ந்த தகவல்கள் , பண பரிவர்த்தனை விவரங்கள், ஓடிபி , விளம்பரங்கள், சேவைகள் , அரசின் எச்சரிக்கைகள் ஆகியவை எஸ் எம் எஸ் வாயிலாகவே நம்மை வந்தடைகின்றன.
எஸ்எம்எஸ்: நம்முடைய ஃபோனில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எஸ்எம்எஸ் வருகின்றன. அனைத்தையும் நாம் படித்து பார்ப்பது கிடையாது. இப்படி எஸ் எம் எஸ் வந்து கொண்டே இருப்பதால் சில சமயங்களில் முக்கியமான தகவல்களை கூட நாம் தவற விட்டு விடுகிறோம். அதே போல ஸ்பேம் மெசேஜ்களும் வருகின்றன. எனவே நமக்கு வரும் எஸ் எம் எஸ் யாரிடமிருந்து வருகிறது என்பதை எளிமையாக அறிந்து கொள்வதற்கான ஒரு வசதியை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் கொண்டு வந்திருக்கிறது.

ஒரு எழுத்தில் தெரிந்து கொள்ளலாம்: எனவே நீங்கள் எஸ்எம்எஸ்ஐ முழுமையாக திறந்து படித்துப் பார்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, அந்த எஸ் எம் எஸ் - ஐ உங்களுக்கு யார் அனுப்பினார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். இதன்படி நமக்கு எஸ்எம்எஸ் வரும்போது ஹெட்டரில் காட்டும் உதாரணமாக VM-CIUBBANK -S, JD-ABCXYZ-P, என அதன் ஹெட்டரில் காட்டும். இதில் கடைசியில் இடம்பெற்றுள்ள எழுத்தை கொண்டே அது என்ன மெசேஜ், யார் எதற்காக அனுப்பினார்கள் என தெரிந்து கொள்ளலாம்.

எந்த எழுத்துக்கு என்ன அர்த்தம்: இதன்படி கடைசி எழுத்து P என இருந்தால் அது விளம்பர நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட மெசேஜ் என தெரிந்து கொள்ளலாம். S என்ற எழுத்து இருந்தால் அது சேவை நோக்கத்திற்காக அல்லது உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களால் அனுப்பப்பட்டிருக்கும். T என்ற எழுத்து இருந்தால் அது பணப் பரிவர்த்தனை சார்ந்த மெசேஜ், அதே போல ஓடிபி மெசேஜிலும் இந்த எழுத்து இருக்கும். அதே போல G என்ற இருந்தால் அது அரசு சம்பந்தப்பட்ட மற்றும் அரசு அங்கீகரித்த மெசேஜ் ஆகும்.
மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை: இந்தியாவில் நாள்தோறும் 1.1 பில்லியன் மொபைல் பயனர்கள் ஃபேம் மற்றும் தேவையற்ற எஸ்எம்எஸ் பெறுகின்றனர். சில சமயங்களில் இந்த ஸ்பேம் மெசேஜ்களால் பணத்தை இழக்கும் நிலைக்கு கூட சென்றுவிடுகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-இல் எது தேவையானது, எது தேவையற்றது என்பதை எளிதில் பிரித்துப் பார்க்கவே இப்படி ஒரு நடைமுறையைகொண்டு வந்திருக்கிறது டிராய். இனி எஸ்எம்எஸ்இல் இந்த கடைசி எழுத்தை கொண்டு யாரிடமிருந்து வந்திருக்கிறது என எளிதாக தெரிந்து கொள்ளலாம், தேவைப்பட்டால் நாம் திறந்து பார்க்கலாம் இல்லையென்றால் அப்படியே டெலிட் செய்துவிடலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications