2024-2025ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டு இருக்கிறது. எந்தெந்த படிவங்களை யார் யார் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்களை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம் .வருமான வரித்துறை தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐடிஆர் 1 , 2, 3, 4,5 ஆகிய படிவங்களை வெளியிட்டு இருக்கிறது.
ஐடிஆர் 1:
ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் இந்த படிவத்தின் மூலம் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும். உங்களுக்கு மாத சம்பளம் வருகிறது அல்லது ஓய்வூதியம் வருகிறது, சொந்தமாக வீடு இருக்கிறது, வங்கி டெபாசிட் மூலம் வட்டி வருமானம் கிடைக்கிறது எனும்போது இந்த படிவம் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் இயக்குனராகவோ, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்திருப்பவராகவோ இருந்தால் இந்த படிவத்தை பயன்படுத்த முடியாது.

ஐடிஆர் 2:
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் வருமானம் வருகிறது, வெளிநாடுகளில் உங்களுக்கு சொத்து இருக்கிறது அல்லது மூலதன ஆதாயம் வரி இருக்கிறது என்றால் உங்களால் ஐடிஆர் 1 படிவத்தை பயன்படுத்த முடியாது. அதற்கு மாற்றாக நீங்க ஐடிஆர் 2 படிவத்தை தான் பயன்படுத்த முடியும். தனி நபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் இந்த படிவத்தின் மூலம் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். மனைவி அல்லது குழந்தை பெயரில் வரும் வருமானத்தை ஒருங்கிணைத்து கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்த படிவத்தை தான் பயன்படுத்த முடியும்.
ஐடிஆர்3:
தொழில் புரிபவர்கள் அல்லது தொழில்முறை நிபுணர்களும் இந்த படிவத்தின் மூலம் தான் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என தொழில்முறை நிபுணர்கள் இதனை தான் பயன்படுத்த முடியும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற சரியான கணக்கு புத்தகம் உங்களிடம் இருக்க வேண்டும்.
ஐடிஆர் 4:
சிறு தொழில் உரிமையாளர்கள், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டக்கூடிய தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் நபர்கள் இந்த படிவத்தின் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். உங்கள் வருமானம் 44AD, 44ADA, 44AE போன்ற வரி விதிகளின் கீழ் அனுமான அடிப்படையில் கணக்கிடப்பட்டால் இது தான் உங்களுக்கு சரியான படிவம்.
ஐடிஆர் 5:
நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் ( Limited Liability Partnerships (LLPs)), தனிநபர்களின் அமைப்புகள் (Bodies of Individuals (BOIs)), இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும். தனிநபர்கள் இந்த படிவத்தை பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications