வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து நிரந்தரமாக குடியேறுவதையும் வேலை செய்வதையும் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வருகிறது .அப்படித்தான் அண்மையில் ஹெச்1பி விசாவிற்கு அதிக கட்டணத்தை விதித்தது. மேலும் விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
படித்து முடித்துவிட்டு வெளிநாடு வேலை என்றால் அமெரிக்காவுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது . பல்வேறு நாடுகளும் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களையும் இந்தியர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தருகின்றன. அப்படித்தான் விமான டிக்கெட்டை விட குறைந்த விலைக்கு விண்ணப்பம் செய்து ஜப்பானில் நம்மால் நிரந்தர குடியுரிமை பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.

ஜப்பான அரசு தங்களுடைய நிரந்தர குடியுரிமை கோருவதற்கான விண்ணப்ப கட்டணத்தை 8000 யென் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 5 ஆயிரம் ரூபாயாக குறைத்து இருக்கிறது. அதாவது 5000 ரூபாய் இருந்தால் நீங்கள் ஜப்பானில் நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பம் செய்ய முடியும். கிட்டத்தட்ட இங்கிருந்து நம் ஜப்பான் செல்வதற்கான விமான டிக்கெட்டை விட இந்த பணம் குறைவாக இருக்கிறது.
ஜப்பானில் வேலை செய்யக்கூடிய வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது, குழந்தை பிறப்பு வீதமும் குறைந்து இருக்கிறது . எனவே தங்களுடைய பொருளாதாரத்தை தொடர்ந்து நிலைத்தன்மையுடன் வைத்திருக்க ஜப்பான் அரசாங்கம் வெளிநாட்டவர்கள் ஜப்பானில் வந்து தங்குவதையும் நிரந்தர குடியுரிமை பெறுவதை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தான் திறன்மிகு நிபுணர்கள் ஜப்பானிற்கு வந்து நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தை குறைத்து இருக்கிறது 8000 யென்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 5 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது .
ஜப்பானின் நிரந்தர குடியுரிமை பெற ஜப்பான் அரசு சில குறிப்பிட்ட தகுதிகளையும் நிர்ணயம் செய்திருக்கிறது. தொடர்ந்து பத்து ஆண்டு காலம் ஜப்பானில் அவர்கள் தங்கி இருக்க வேண்டும் இதில் குறைந்தது 5 ஆண்டு காலம் வேலை செய்திருக்க வேண்டும் அல்லது குடும்ப விசாவில் ஜப்பானில் வந்து தங்கி இருந்திருக்க வேண்டும். அதேபோல ஜப்பான் குடிமக்களை திருமணம் செய்தவர்கள் தொடர்ந்து ஜப்பானில் ஓர் ஆண்டு தங்கி இருப்பவர்கள் நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்யலாம்.ஜப்பான் குடிமக்களுக்கு அல்லது ஜப்பானில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு பிறந்தவர்களின் குழந்தைகள் ஓராண்டு காலம் அங்கே தங்கி இருந்தால் ஜப்பானில் நிரந்தர குடியுரிமை பெற முடியும்.
இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்றால் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப படிவம், விசா ,குடியிருப்பதற்கான அட்டை , வருமான ஆதாரம் , ஜப்பான் நாட்டவர் ஒருவரின் உத்திரவாத கடிதம் இருந்தால் போதும். பொதுவாக ஜப்பானில் நிரந்தர குடியுரிமை வேண்டி நாம் விண்ணப்பம் செய்தோம் என்றால் நான்கிலிருந்து எட்டு மாதங்களுக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவு தெரிந்துவிடும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications