பெங்களூரில் சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் மெட்ரோ இணைப்பு பெற இருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் சிக்கி இருக்கும் நிலையில் இது மெட்ரோ சேவை பெரிய தீர்வாக அமையும்.
சர்ஜாபூரில் இருந்து ஹெப்பல் வரை கோரமங்களா மற்றும் மெஹ்கிரி சர்க்கிள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைப்பதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூருக்குள் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து பணிக்கு செல்வோர் பயனடைய இருக்கின்றனர்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் இந்த திட்டத்தின் மதிப்பீடு 28,450 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை அனுமதி தந்துள்ள நிலையில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ரயில் பாதை ஆனது மொத்தம் 36 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். 28 மெட்ரோ ரயில் நிலையங்கள் இதில் அடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் உயர்மட்ட பாதையில் 22 . 14 கிலோமீட்டர் ரயில் பாதையாகவும் , சுரங்கமாக 14.45 கிலோமீட்டர் பாதையும் அமைக்கப்படும். உயர்மட்ட பாதையில் 17 ரயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 11 நிலையங்களும் இருக்கும்.
மத்திய அரசு அதிகாரிகள் இந்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அனுமதி தந்த உடன் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனுமதி கிடைத்த விடும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பொது மக்களுக்கு மிகப்பெரிய தீர்வாக அமைந்துள்ளன. எனவே சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பது மிக அவசியமானது என மக்கள் தரப்பிலும் வரவேற்பு காணப்படுகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications