நம் வாழ்க்கையில் அன்புக்குரியவர்களை இழப்பது என்பது மிகவும் வேதனையானது . அதுவும் தந்தை அல்லது தாயை இழப்பது என்பது வாழ்நாள் முழுவதும் நீங்காத வேதனையை தரக்கூடியது . இத்தகைய சூழலில் இறந்த பெற்றோர் வங்கியில் வாங்கி இருக்கக் கூடிய கடன்களின் சுமை திடீரென உங்கள் மீது விழுந்தால் அது உங்களுக்கு நிதி ரீதியாக இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெற்றோர் வங்கியில் வாங்கிய கடனை மகன் அல்லது மகள் அல்லது சட்டபூர்வ வாரிசாக இருப்பவர்கள் கட்டாயம் திரும்ப செலுத்த வேண்டுமா, வங்கிகள் உங்களிடம் வந்து இந்த கடனை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும் என கூற முடியுமா என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம் .

வங்கிகளில் ஒரு நபர் கடன் வாங்கி இறந்துவிட்டார் எனும் போது அந்த கடன் அவருடைய மனைவி அல்லது குழந்தைகளுக்கு மாற்றப்படுவதில்லை . இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அது நடக்கும் . வங்கிகள் நீங்கள் கடனை செலுத்தியாக வேண்டும் என கூறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும் . எனவே உங்கள் பெற்றோர் வங்கியில் வாங்கக்கூடிய கடன் உங்கள் மீது விழுகிறதா , இல்லையா என்பதை நாம் தற்போது விரிவாக பார்க்கலாம் .
பெற்றோர் வாங்கிய கடன் சுமை பிள்ளைகள் மீது விழுவது என்பது வெவ்வேறு சூழ்நிலைகளை பொறுத்து மாறுபடும். உதாரணமாக வங்கிகள் கடன் தொகையை வசூலிக்கும் முயற்சி ஒரு பகுதியாக உங்களுக்கு தார்மீக பொறுப்பு இருக்கிறது எனக் கூறி உங்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற விரும்பலாம். ஆனால் சட்டத்தின் அப்படி எந்த ஒரு அதிகார வரம்பும் கிடையாது . சில சமயங்களில் மட்டுமே பெற்றோர் வங்கியில் வாங்கிய கடனை நீங்கள் திரும்ப அடைக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
இறந்த பெற்றோரிடமிருந்து வாரிசுகள் அதாவது மகன் அல்லது மகள் ஏதேனும் சொத்துக்களை வாரிசு உரிமையாக பெற்று இருந்தால் , அந்த சொத்தின் மதிப்பிற்கு உட்பட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. பெற்றோரிடமிருந்து எந்த சொத்தும் வாரிசுகளுக்கு வரவில்லை என்றால் வாரிசுகள் தங்கள் சொந்த பணத்தையோ அல்லது தங்கள் சொந்த சொத்தையோ, சம்பாத்தியத்தையோ கொண்டு கடனை அடைக்கத் தேவையில்லை. வங்கிகள அவ்வாறு அவர்களை வற்புறுத்தவும் முடியாது.
வீடு, கார் , தங்கம் போன்ற பொருட்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி அதனை திரும்ப அடைக்காமல் இருந்தால் வங்கிகள் அந்த பொருட்களை ஏலத்தில் விட்டு பணத்தை சட்டப்படி வசூல் செய்து கொள்ளலாம். இல்லை எங்களுக்கு அந்த வீடோ, காரோ ,தங்க நகையோ தேவை எனும்போது வாரிசுகள் கடனை திரும்ப செலுத்தி அந்த பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுடைய பெற்றோர் கடன் வாங்கும் போது நீங்கள் கூட்டு விண்ணப்பதாரர் அல்லது ஜாமீன் தாரராகவோ கையெழுத்துட்டு இருந்தால் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அந்த கடனை திரும்ப செலுத்த வேண்டிய முழு பொறுப்பும் உங்களுக்கு உண்டு.
தனிநபர் கடன் போன்ற எதையும் அடமானம் வைக்காமல் வாங்கக்கூடிய கடன்களுக்கு வாரிசுகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க மாட்டார்கள். இதுபோன்ற சூழல்களில் வங்கிகள் அந்த கடன்களை வாரா கடன்களாக அறிவித்து விடும். இல்லை அதற்கு காப்பீடு இருந்தால் காப்பீடு தொகை மூலம் அதனை ஈடு கட்டிக் கொள்ளும். எனவே உங்களுடைய மறைந்த தந்தையோ, தாயோ வங்கியில் தனி நபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு போன்ற கடன்களை வைத்திருக்கும் போது நீங்கள் அதை திரும்ப செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு ஏற்படாது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications