இந்தியாவில் முன்னணி காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய காப்பீட்டு நிறுவனமாகவும் எல்ஐசி இருந்து வருகிறது . எல்ஐசி பொறுத்தவரை பெண்களுக்கு மிக சிறப்பான ஒரு வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணத்தால் பெரும்பாலான பெண்கள் இந்த வாய்ப்பை பெறாமல் தவற விட்டு விடுகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெரும் பெண்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட முடியும். அது என்ன வேலை வாய்ப்பு ,அதில் எப்படி இணைவது என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். எல்ஐசி நிறுவனம் பீமா சகி திட்டம் என்ற பெயரில் பெண்களுக்காகவே ஒரு பிரத்தியேகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு எல்ஐசி முகவராவதற்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியை வழங்குகிறது. 18 லிருந்து 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் எல்ஐசி-இன் பீமா சகி திட்டத்தின் கீழ் இணைந்து எல்ஐசி முகவராக மாறலாம். இதன் மூலம் முதல் ஆண்டில் ஊக்கத்தொகையாக மட்டும் ஒவ்வொரு மாதமும் 7 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இதனை அடுத்து குறிப்பிட்ட அந்த பெண் முகவர் விற்பனை செய்யக்கூடிய பாலிசிகளுக்கு ஏற்ப கமிஷனும் கிடைக்கும். பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எல்ஐசி இந்த பீமாசகி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .பெண்களுக்கு எல்ஐசி முகவராவதற்கான பயிற்சி இதில் வழங்கப்படும் .பயிற்சி முடித்த பிறகு பெண்கள் எல்ஐசி ஏஜெண்டுகளாக வேலை செய்யலாம்.

இரண்டாவது ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் ரூபாயும் மூன்றாவதாக ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூன்று ஆண்டுகளில் ஒரு பெண் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் . இது தவிர அவர்கள் விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு பாலிசிக்கும் கமிஷனும் கிடைக்கும் . இது அவர்களின் வருமானத்தை மேலும் பெருக்க உதவி செய்யும்.
சிறப்பாக செயல்படக்கூடிய பெண் முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்ஐசி அவர்களுக்கு டெவலப்மென்ட் ஆபிஸர் ஆகும் வாய்ப்பு வழங்குகிறது. இந்தியாவை சேர்ந்த பெண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் .18 இல் இருந்து 70 வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இந்த மூன்று ஆண்டுகளும் ஊக்க தொகையும் கிடைக்கும் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் இணைய விரும்பு எல்ஐசி முகவராக விரும்பக் கூடிய பெண்கள் https://licindia.in/test2 இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் இந்த திட்டத்தின் முழு விவரங்கள் உள்ளன. இதனை படித்து விட்டு பிறந்த தேதி ,மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை உள்ளிட வேண்டும் . எல்ஐசி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உங்களை தொடர்பு கொண்டு இந்த திட்டம் குறித்த தகவல்களை விரிவாக வழங்குவார்கள் அதன்படி நீங்கள் இதில் இணைந்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications