சென்னை: இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது . எல்ஐசி கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
எல்ஐசி ஸ்காலர்ஷிப்: பொருளாதார ரீதியில பின்தங்கி இருக்கக்கூடிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உயர் படிப்புக்கு சென்று அந்த உயர் படிப்பை தொடர்வதை ஊக்குவிக்கும் வகையில் எல்ஐசி நிறுவனம் இந்த ஸ்காலர்ஷிப்பை வழங்குகிறது. யாருக்கெல்லாம் இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கும் , இதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது ,கடைசி தேதி என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

யாருக்கு கிடைக்கும்: எல்ஐசி கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் என்பது இரண்டு வகைகளாக வழங்கப்படுகிறது. ஒன்று பொது ஸ்காலர்ஷிப், இரண்டாவது மாணவிகளுக்கான சிறப்பு ஸ்காலர்ஷிப். இந்த பொது ஸ்காலர்ஷிப் திட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தனியார் கல்லூரியில் படித்தாலும் சரி அல்லது அரசு கல்லூரியில் படித்தாலும் சரி மருத்துவம், பொறியியல் மற்றும் பிற பட்ட படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், ஐடிஐ, வொகேஷனல் ட்ரைனிங் படிப்புகளுக்கும் இந்த ஸ்காலர்ஷித் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய முடியும்.
எந்த படிப்புகளுக்கு கிடைக்கும்: பொது திட்டத்தில் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் கட்டாயம் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் 60% க்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு அவர்கள் மருத்துவம், பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, இன்டகிரேட்டட் கோர்ஸ், டிப்ளமோ, அரசு அங்கீகரித்த வொகேஷனல் படிப்புகள், ஐடிஐ உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும். இந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் அல்லது கார்டியனின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும்.
மாணவிகளுக்கு சிறப்பு திட்டம்: மாணவிகளுக்கான சிறப்பு ஸ்காலர்ஷிப் திட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம். 10ஆம் வகுப்பு தேர்வில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும் . ஐடிஐ ,டிப்ளமோ ,வொகேஷனல் படிப்புகளில் இந்த ஆண்டு அட்மிஷன் பெற்று இருக்க வேண்டும். இவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானமும் 4.5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பம் செய்வது: இதற்கு விண்ணப்பம் செய்ய எல்ஐசி நிறுவனத்தின் https://licindia.in/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ஹோம் பக்கத்திலேயே எல்ஐசி கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப் என்பது இருக்கும் . அதனை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பக்கம் தோன்றும். அதில் இருக்கும் விவரங்களை முழுமையாக படித்த பிறகு விண்ணப்பம் செய்யலாம்.
எவ்வளவு கிடைக்கும்: தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆவணங்களை பதிவேற்றி செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொது ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40,000 ரூபாய் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படும் , இது அந்த படிப்பு முடியக்கூடிய அத்தனை ஆண்டுகளுமே வழங்கப்படும்.
மாணவிகளுக்கு: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 30,000 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். அந்த பொறியியல் படிப்பினை அவர்கள் முடிக்கும் வரை ஆண்டு தோறும் இந்த தொகை வழங்கப்படும். மற்ற பட்ட படிப்புகளை படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளுக்கும் இது பொருந்தும். மாணவிகளுக்கான சிறப்பு திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்து ஐடிஐ டிப்ளமோ வொகேஷ்னல் படிப்புகளை பயிலும் மாணவிகள் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் என இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications