ஏதாவது பண நெருக்கடி அவசரமாக ஏற்பட்டால் தங்களது தேவையை சமாளிக்க மக்கள் பர்சனல் லோன்களை தேர்ந்தெடுக்கலாம். சிலர் கிடைக்கிறதே என்று பர்சனல் லோன்களை எடுப்பர். இதுபோன்ற லோன்களைப் பெறுவதற்கு வலுவான நிதிப் பின்னணி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிக வட்டிக்கு பர்சனல் லோன்களை வாங்க வேண்டியதிருக்கும்.
சொத்து வைத்திருப்பவர்கள் அதை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். இது தவிர நகைகள் மீது கடன் வாங்கலாம். நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறலாம். இந்தக் கடனுக்கும் குறைந்த வட்டி விகிதம்தான் இருக்கும். நகைக்கடனில் விவசாயிகளுக்கும் கடன் வழங்கப்படும். அவர்கள் நிலத்தின் பட்டாவை வைத்திருந்தால் மற்றவர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.

நகைகள் மீதான கடனை ஆண்டு முடிவில் கட்டினால் போதும். மாதாமாதம் வட்டி கட்டிவந்தால் கட்டவேண்டிய தொகை குறையும். அதுவே 12 மாதங்கள் கழித்து திருப்ப வேண்டிய தேதியில் மொத்தமாகக் கட்டினால் அதிகம் செலுத்த வேண்டும்.
சொத்துக்கள் மீது கடன் வாங்குவது சற்று சிரமம். நில மதிப்பீட்டாளர்கள், வழக்குரைஞர் அறிவுரை போன்றவற்றை பெற்ற பின்னர்தான் கடன் தொகைக்கான அனுமதி வழங்கப்படும். ஆனால் நகைகள் என்றால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் உடனடியாக வங்கிகளில் அடமானம் வைத்து வேண்டிய கடன் தொகையைப் பெறலாம்.
நகைகளின் மீது கடன் வாங்கும்போது அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் சொத்துகள் மீது கடன் வாங்குவதில் சிக்கலான நடைமுறைகள் இருப்பதால் நினைத்த நேரத்தில் வங்கிகளில் கடன் வாங்க முடியாது. சில காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும். அவசரகாலத்துக்கு இந்த கடன் முறை உதவாது.
இந்த இரு வழிகள் தவிர வெளியில் தனி நபர்களிடம் கடன் வாங்கலாம். ஆனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இது கட்டுபடியாகாது. பெரும் தொகை கடனாக வேண்டுமென்றால் அந்தளவுக்கு நகைகள் யாரிடமும் இருக்காது.
அப்படிப்பட்ட சமயத்தில் சொத்துக்களை வைத்து நமக்குத் தேவையான பணத்தை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறலாம். வங்கிகளிடம் இவ்வாறு கடன் வாங்கும்போது நமது சொத்தை வங்கிக்கு ஈடுகடனாக எழுதிப் பதிந்து தரவேண்டும். இது ஒருவகையில் இருதரப்புக்குமே நல்லதாகும். கடனை முடித்துவிட்டால் இந்த ஈடுகடனை வங்களிகள் ரத்து செய்து விடும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications