ஆன்லைனில் பிஎஃப் பணத்தினை எடுப்பது எப்படி.. வேறு எப்படியெல்லாம் எடுக்கலாம்..!

மத்திய அரசு பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் சேவையை உட்புகுத்தி வருகின்றது. இதனால் பலரும் அலையாமல் தங்களது வேலைகளை இருந்த இடத்தில் இருந்தே வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஆதார் அப்டேஷன், பான், வாக்காளர் அடையாள அட்டை, வருங்கால வைப்பு நிதி சேவைகள், அஞ்சலகம் என பலவற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பல மணி நேரங்கள் சென்று அலைய வேண்டிய வேலைகள் கூட, சில நிமிடங்களில் ஆன்லைனில் முடிந்து விடும் நிலை உள்ளது.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஊழியர்கள் அவர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் எடுப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளையும் ஆன்லைனிலேயே கொண்டு வந்துள்ள நிலையில், வருங்கால வைப்பு நிதி கணக்கிலும் பற்பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது அரசு.

பிஎஃப் பணம்

பிஎஃப் பணம்

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணபித்து பெற முடியும். முன்பெல்லாம் ஒரு ஊழியர் பிஎஃப் பணத்தினை எடுக்க வேண்டும் என்றால், நிறுவனத்தின் கையொப்பம் அவசியம். ஆனால் இன்று அப்படியில்லை. நிறுவனத்தின் கையெப்பம் இல்லாமலேயே பணத்தினை எடுக்கும் வசதி உண்டு.

எதற்காக பிஎஃப் பணம்?

எதற்காக பிஎஃப் பணம்?

இது குறிப்பாக திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு. இதற்காக நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி?

பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி?

இதற்காக நீங்கள் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN மற்றும் கொடுத்து லாகின் செய்யவும். அதன் பிறகு க்ளைம் என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

இது அடுத்த புதிய பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும். அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும். அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பின்பு உங்களுக்கு உங்களது பிஎஃப் தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.

 

உமாங்க் ஆப் மூலம் எடுக்கலாம்?

உமாங்க் ஆப் மூலம் எடுக்கலாம்?

உங்களிடம் பிஎஃப் கணக்கில் இருந்து UMANG App-ஐ பயன்படுத்தியும் எளிதாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக உங்களது ஸ்மார்ட்போனில் UMANG App டவுன்லோட் செய்ய வேண்டும். அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.

அதில் Employee Centric services என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Raise Claim என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN Number- ஐ பதிவிட வேண்டும்.

அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password-ஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். எனினும் அரசின் இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாருடன் UAN Number, UMANG App, மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+