பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல், பிஎஃப் வித்டிராவல் போன்ற பல இடங்களில் கட்டாயமாக உள்ளது.
10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும்.
இப்படிப் பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆக உங்கள் பான் கார்டு தொலையும்பட்சத்தில், புதிய பான் கார்டினை அவசர தேவைக்காக உடனடியாக பெறுவது எப்படி என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
இணையத்தில் எப்படி டவுன்லோடு?
இதற்காக வாடிக்கையாளர்கள் NSDL தளத்திற்கு செல்லவும். ( https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html) அல்லது https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும். அதில் கீழாக உள்ள our services என்ற ஆப்சனில் instant E-PAN என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். நீங்கள் இதற்கு முன்பாக e-pan டவுன்லோடு செய்யவில்லை எனில், get new e-pan என்பதை கிளிக் செய்வும்.
எப்படி டவுன்லோடு செய்வது?
மேலும் e-pan டவுன்லோடு செய்யும் முன்னர், check status என்பதன் கீழ் உள்ள download pan என்பதை கிளிக் கொடுத்து continue என்பதை கொடுக்கவும்.
இதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணினை கேட்கும். அதனை கொடுத்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டு க்ளிக் செய்யவும்.
மெயிலுக்கு வரும் பான்
அதன்பிறகு உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். ஒடிபியை கொடுத்து க்ளிக் செய்வதற்கு முன்னர், உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? குறிப்பாக இ-மெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது e-pan என்பது உங்களது மெயில் ஐடிக்கு வரும்.
வேறு எப்படி டவுன்லோடு செய்யலாம்?
உங்கள் மெயில் ஐடிக்கு வந்த பான் கார்டினை ரீபிரிண்ட் செய்து கொள்ளலாம். எனினும் சில காரணங்களுக்காக பிரிண்ட் செய்ய முடியாது. உங்களது பான் கார்டினை tin - NSDL or UTIITSL இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஆன்லைனிலேயே 5 - 10 நிமிடங்களில் உங்களது பான் கார்டினை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications