ஆதார் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது.. டவுன்லோட்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கி, சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தை பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரையில் அனைத்து முக்கிய சேவைகளிலும், ஆதார் கார்டு இருந்தாலே மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்.

அந்தளவுக்கு ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு ஆதார் எந்தளவுக்கு முக்கியம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கார்டு தொலைந்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை தொற்றிக் கொள்ளும்.

இதற்காக இனி எங்கெங்கு அலைய வேண்டுமோ என்ற எண்ணம் எழும். இன்று ஆதாரில் திருத்தம் அல்லது மொபைல் எண் மாற்றம். ஏன் உங்களது ஆதார் எண் தெரியாவிட்டாலும் கூட, ஆன்லைனில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு டிஜிட்டல் வசதிகள் வந்துள்ளன.

எப்படி பதிவிறக்கம் செய்யலாம்?

எப்படி பதிவிறக்கம் செய்யலாம்?

இதற்காக நீங்கள் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மற்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எப்படி? ஆன்லைனில் ஆதார் எண் தெரியாவிட்டால் எப்படி தெரிந்து கொள்வது? எப்படி டவுன்லோடு செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி தெரிந்து கொள்வது?

எப்படி தெரிந்து கொள்வது?

இதற்காக நீங்கள் https://resident.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்குள் செல்லலாம்.
இதில் My Aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Aadhaar services என்ற ஆப்சனில் Retrieve Lost or Forgotten EID/UID என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களது தனிப்பட்ட விவரங்கள், பெயர், பதிவு செய்த மொபைல் எண் அல்லது மெயில் ஐடி-யை கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளை சரியாக பதிவு செய்து Send OTP என்பதை கொடுக்க வேண்டும். இது ஆறு இலக்க ஓடிபி மொபைல் எண்ணுக்கு வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அல்லது மெயிலுக்கு ஆதார் எண் வந்திருக்கும்.
இதன் மூலம் உங்களது aadhaar நம்பரை தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து தொலைந்துபோன ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எப்படி டவுன்லோட்

எப்படி டவுன்லோட்

இந்த ஆப்சன் ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது ஆதார் புதியதாக அப்ளை செய்தவர்களுக்கு ஆதார் கார்டு வரும் முன்னரே தேவைப்பட்டால், டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதற்காக நீங்க https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் சென்று, அங்கு get aadhaar என்ற ஆப்சனில் உள்ள download aadhaar என்பதை கிளிக் செய்யவும்.

அதில் UID, EID அல்லது VID என்ற ஆப்சனில் ஒன்றை கிளிக் செய்யவும். நீங்கள் ஆதார் நம்பரை தேர்வு செய்கிறீர்கள் எனில், ஆதார் நம்பரை கொடுத்து கிளிக் செய்யவும்.

 

எப்படி டவுன்லோடு செய்வது?

எப்படி டவுன்லோடு செய்வது?

அதன் பிறகு உங்களது பெயர் மற்றும் பின் கோடினை கொடுத்து கிளிக் செய்யவும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளையும் கொடுத்து கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் கொடுத்து, ஓடிபி-யை பெறவும். இதன் பிறகு ஒடிபியை பதிவு செய்து கிளிக் செய்யவும்.
இதன் பிறகு Validate & document என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்களது ஆதாரின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lost your aadhaar card? How to find aadhaar number online? How to get a new one?

Lost your aadhaar card? How to find aadhaar number online? How to get a new one/ ஆதார் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது.. டவுன்லோட்?
Story first published: Monday, November 8, 2021, 18:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X