உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அடுத்த என்ன செய்வது? இதனால் ஏதும் பிரச்சனை வருமா? என பயப்படாதீர்கள். உங்கள் ஆதார் நம்பர் மட்டும் தெரிந்திருந்தால் போதும், மீண்டும் ஆதார் கார்டின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.
எனினும் தவறாக பயன்படுத்தப்படலாமோ என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆக ஒரு ஆதார் இதனை இருந்த இடத்தில் இருந்தே உங்களது ஆதார் நம்பரை லாக் செய்யலாம். இணையத்திலும் சென்று லாக் செய்யலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசு தரப்பான சேவைகளிலும் ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக எப்போதும் பத்திரமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.
எம் எஸ் எஸ் மூலம் எப்படி லாக் செய்வது எப்படி?
ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் பதற்றப்படாமல் அதனை முதலில் லாக் செய்யுங்கள். இதனை எஸ் எம் எஸ் மூலமாகவும் கூட லாக் செய்யலாம்.
இதற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, GETOTP என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்கள் ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண்ணினை பதிவிடவும். இதனை 1947 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் ஆக அனுப்பவும்.
நீங்கள் இந்த எஸ் எம் எஸினை பதிவு செய்த பிறகு, உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க ஓடிபி வரும்.
இந்த ஓடிபி பெற்றவுடன், நீங்கள் மீண்டும் உங்களது மொபைலில் இருந்து, LOCKUID இதனை தொடர்ந்து கடைசி நான்கு இலக்க ஆதார் எண், அதனை தொடர்ந்து நீங்கள் பெற்ற ஆறு இலக்க ஓடிபியையும் பதிவிட வேண்டும். இதனை இணையம் மூலமாகவும் லாக் செய்யலாம்.
எப்படி அன்லாக் செய்வது?
ஆதார் கார்டினை லாக் செய்வது சரி? அதனை எப்படி அன்லாக் செய்வது?
இதற்காக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். இதற்காக நீங்கள் GETOTP இதனை தொடர்ந்து ஆறு இலக்க VID நம்பரையும் அனுப்ப வேண்டும்.
இதன் பிறகு உங்களுக்கு UIDAIல் இருந்து 6 இலக்க ஓடிபி வரும். அதன் பிறகு UNLOCKUID என டைப் செய்து தொடர்ந்து ஆறு இலக்க VID இதனை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த ஆறு இலக்க OTPயையும் பதிவிட்டு 1947 என்ற எண்னுக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
உங்களது மெசேஜினை பெற்ற பிறகு UIDAI உங்களது ஆதார் நம்பரை அன்லாக் செய்யும். இதற்காக உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட மெசேஜ் வரும். ஆக லாக் செய்வதும், அதனை அன்லாக் செய்வதும் உங்கள் மொபைலில் இருந்தே செய்து கொள்ளலாம்.
இணையத்தில் லாகின் செய்யுங்கள்?
இதற்காக நீங்க https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் சென்று, அங்கு get aadhaar என்ற ஆப்சனில் உள்ள download aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
அதில் UID, EID அல்லது VID என்ற ஆப்சனில் ஒன்றை கிளிக் செய்யவும். நீங்கள் ஆதார் எண்ணினை தேர்வு செய்கிறீர்கள் எனில் ஆதார் நம்பரை கொடுத்து கிளிக் செய்யவும்.
எப்படி டவுன்லோடு செய்வது?
அதன் பிறகு உங்களது பெயர் மற்றும் பின் கோடினை கொடுத்து கிளிக் செய்யவும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளையும் கொடுத்து கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் கொடுத்து, ஓடிபி-யை பெறவும். இதன் பிறகு ஒடிபியை பதிவு செய்து கிளிக் செய்யவும்.
இதன் பிறகு Validate & document என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்களது ஆதாரின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications