இந்தியாவில் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருக்கும் ஓட்டுனர் உரிமம் தேவை. அப்படி இருக்கையில் சில நேரங்களில் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விடும் வாய்ப்பும் உள்ளது. இந்த பிரச்சினையை இன்றைய டிஜிட்டல் யுகம் மாற்றியமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் அனைத்து ஆவணங்களையும் தற்போது டிஜிட்டல் மயமாக்கி மொபைல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். இதனால் ஒரு சில நிமிடங்களிலேயே அதன் நகலை பெற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது
வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் கட்டாயம்.. இருந்தாலும் சில எதிர்பாராத சமயங்களில் அதை மறந்து விடுவது அல்லது தொலைத்து விடுவது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நீங்கள் உடனடியாக உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

உங்களுடைய டிரைவிங் லைசென்ஸை டவுன்லோட் செய்வது எப்படி?: டிஜிட்டல் முறையில் உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய 2 வழிகளைப் பயன்படுத்தலாம். அதில் ஒன்று டிஜிலாக்கர். மற்றொன்று போக்குவரத்து துறையின் பரிவகான் இணையதளம்.
டிஜிலாக்கர்: டிஜிலாக்கர் இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஆப். இதன் மூலம் குடிமக்கள் தங்களுடைய முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் காபியாக சேமித்து வைத்திருக்க முடியும். சேமித்து வைக்க டிஜிலாக்கர் மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த அப்ளிகேஷனில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் நம்பர் அல்லது மொபைல் நம்பரை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
பின்னர் டாக்குமெண்ட்ஸ் பகுதிக்குச் சென்று டிரைவிங் லைசென்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தின் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை வழங்கி சேமிக்கலாம். இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருப்பதால் அவசர காலங்களில் தேவை என்றால் உடனடியாக டிரைவிங் லைசென்ஸை டவுன்லோட் செய்ய முடியும்.
பரிவகான் இணையதளம்: பரிவகான் இணையதளத்திற்கு சென்று உங்கள் ஓட்டுனர் உரிமத்தின் டிஜிட்டல் காப்பியை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய முடியும். இந்த இணையதளத்திற்கு சென்ற பிறகு "ஆன்லைன் சர்வீசஸ்" என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு டிரைவிங் லைசென்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஓட்டுனர் உரிமத்தின் நம்பர் மற்றும் பிறந்த தேதியை வழங்கி டவுன்லோட் செய்யலாம்.
தற்போது உங்களுக்கு ஒரு குழப்பம் வரலாம்.. அது என்னவென்றால் இதற்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று.. இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. உங்கள் ஓட்டுனர் உரிமம் எப்படி செல்லுபடியாகிறதோ? அதேபோல இந்த லைசென்ஸ் செல்லுபடியாகும். காவல் துறை அதிகாரிகள் இதையும் ஏற்றுக் கொள்வார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை: உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை உங்கள் மொபைலில் அல்லது கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து வைக்க முடியும். தேவைப்பட்டால் டிஜிட்டல் காபியை ஜெராக்ஸ் எடுத்து உங்களுடன் எடுத்துச் செல்லலாம். ஆனால் யாருடனும் இந்த டிஜிட்டல் காப்பியை பகிராதீர்கள் ஒருவேளை உங்களுக்கு கார்டு தேவைப்பட்டால் அதற்கு போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications