ஜூன் 30க்குள் இதை முடிக்கலனா LPG சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து சிலிண்டர் விநியோகத்தில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் வரும் ஜூன் 30க்குள் எல்பிஜி வாடிக்கையாளர்கள் பின்வரும் வேலையை முடிக்காவிட்டால் அவர்களுக்கான சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும்.

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டருக்கு வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு 25 ரூபாய் தான் மானியம் கிடைக்கிறது. அதுவே உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 300 ரூபாய் மானியம் கிடைக்கிறது. இந்நிலையில் எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால், வரும் ஜூன் 30க்குள் உங்கள் எல்பிஜி இணைப்பிற்கு eKYC செய்ய வேண்டும்.

ஜூன் 30க்குள் இதை முடிக்கலனா LPG சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

குறிப்பாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகள் மற்றும் இதுவரை eKYC செய்யாத பொதுவான எல்பிஜி நுகர்வோர்கள் உடனே கேஒய்சி முடிக்க வேண்டும். ஏற்கனவே eKYC முடித்தவர்களுக்கு இது தேவையில்லை. இந்தியன் ஆயில் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas), மற்றும் ஹெச்பி கேஸ் (HP Gas) ஆகிய நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

உங்கள் மொபைல் மூலமாகவோ அல்லது எரிவாயு விநியோகஸ்தர் மூலமாகவோ எளிதாக கேஒய்சி செய்து முடிக்கலாம். வரும் 30க்குள் இதனை முடிக்கவில்லை என்றால் சிலிண்டர் மானியம் கிடைக்காது. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு வெறும் 4ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஒய்சி முடிக்காவிட்டால் இந்த 4 சிலிண்டருக்கு கிடைக்கும் மானியமும் கிடைக்காமல் போகும்.

Also Read

இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலி மற்றும் AadhaarFaceRD செயலி ஆகியவற்றை மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் IndianOil ONE செயலியில் உங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்து, 16 இலக்க LPG ID-ஐ இணைக்க வேண்டும். பின் 'My Profile' பகுதிக்குச் சென்று, 're-KYC' என்பதைத் தேர்வு செய்து, ஆதார் மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து (Face Authentication) சரிபார்க்கலாம்.

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் Hello BPCL செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் பதிவு செய்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'e-KYC' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு, விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு சரிபார்ப்பை முடிக்கலாம்.

Recommended For You

அடுத்ததாக HP Gas வாடிக்கையாளர்கள் HP Pay செயலி மற்றும் Aadhaar FaceRD செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். HP Pay செயலியில் லாகின் செய்து 'MY HP' பகுதிக்குச் சென்று 'LPG Services' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் 'e-KYC' ஆப்ஷனைத் தேர்வு செய்து, 'Capture Face' மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து சரிபார்க்கலாம். இல்லையென்றால் நேரடியாக உங்கள் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று இந்த eKYC-ஐ எளிதாக முடித்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+