உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

மாதம் ரூ.1000: தமிழ்நாட்டை பின் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசுகளும் இதே போன்ற திட்டங்களை தங்களுடைய மாநிலத்தில் கொண்டு வந்திருக்கின்றன. இந்த திட்ட பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களின் வங்கிக்கணக்கிலேயே அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளும் மகளிர் உரிமை தொகையாக பெற்று வருகின்றனர் .

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பொருத்தவரை தமிழ்நாட்டில் புதிதாக மகளிர் உரிமை தொகையைத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய காத்திருந்த பெண்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகங்கள் தெரிய வரப் பிரசாதமாக அமைந்திருக்கின்றன. தங்களுக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை , புதிதாக ரேஷன் அட்டை பெற்று இருக்கிறோம் என்ற பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான ஒரு வாய்ப்பினை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வழங்கி இருக்கின்றன.

லட்சக்கணக்கான விண்ணப்பம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அதிகாரிகள் அந்த விண்ணப்பங்களை தற்போது சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆனால் மகளிர் உரிமைத்தொகை வேண்டி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைத்துவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தகுதி இருந்தால் மட்டுமே: அரசு தகுதி வாய்ந்த பெண்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் பணம் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது . அதற்கான தகுதிகளையும் நிர்ணயம் செய்திருக்கிறது. எனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக எத்தனை பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தாலும் பின்வரும் பொருளாதாரத் தகுதிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

என்னென்ன தகுதிகள்: குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும், ஐந்து ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த ஆயிரம் ரூபாய் தொகை என்பது கிடைக்கும். ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த தலைவிகள் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்குமா: மேலே கூறிய தகுதிகளை பூர்த்தி செய்யாத குடும்ப தலைவிகள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பத்தை வழங்கினாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது . எனவே விண்ணப்பம் செய்த அனைவருமே தங்களது பணம் கிடைத்து விடும் என காத்திருக்காமல் தங்களுக்கு அந்த தகுதிகள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவர்களுக்கு கிடைக்காது: குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார் மற்றும் வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார் என்றால் அவர்களுக்கு நிச்சயம் இந்த உரிமை தொகை கிடைக்காது. மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ,பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகளின் ஊழியர்கள் ,வாரியங்கள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்பி ,எம்எல்ஏக்கள் ,மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ,ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவிகளுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.

யாருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை: சொந்த பயன்பாட்டிற்காக கார் ,ஜீப் ,டிராக்டர் ,கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்திருந்தால் அவர்களுக்கும் பணம் கிடைக்காது. ஏற்கனவே தொடர் சமூக பாதுகாப்பு திட்டமான ஓய்வூதியம் பெறக்கூடிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த மகளிர் உண்மை தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியாது. எனவே நான் உங்களுடன் முகாமில் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்து விட்டேன் எனக்கு பணம் வந்துவிடும் என பெண்கள் காத்திருக்காமல் தங்களுக்கு உண்மையிலேயே அதற்கான தகுதிகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+