ஏழை எளிய மக்களும் சமையல் எரிவாயு இணைப்பை பெறுவதை ஊக்குவிக்கு வகையில் மத்திய அரசு இலவச எரிவாயு இணைப்பு திட்டமான உஜ்வாலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை இந்த ஆண்டும் தொடர்வதற்கு மத்திய அரசு 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
உஜ்வாலா திட்டம்: இந்த திட்டத்தில் மிக முக்கியமான ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தில் இணையக்கூடிய பெண்களுக்கு முதலில் கிடைக்கக்கூடிய சமையல் எரிவாயு உருளை, அடுப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மானியம்: கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பெறக்கூடிய ஒவ்வொரு சிலிண்டருக்கும் 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மானிய தொகையானது 300 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெறலாம் அதில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் 300 ரூபாய் மானியம் சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மானியம் தொடரும் என அறிவிப்பு: இந்த ஆண்டும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானிய தொகை தொடர்ந்து வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது . வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கும் இந்த மானியம் கிடைக்கும், அதேபோல 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களுக்கு இந்த மானிய தொகை விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இனி 9 சிலிண்டர்களுக்கு தான் மானியம்: 2025-26 ஆம் நிதி ஆண்டில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 12,060 கோடி ரூபாயை ஒதுக்கீடும் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 10.33 கோடி பயனாளிகள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர் .இந்த திட்டத்தில் அரசு மிக முக்கியமான ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய தொகையானது 9 சிலிண்டர்களுக்கு என குறைக்கப்பட்டிருக்கிறது. என்டிடிவி தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள்: அதாவது இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு இதுநாள் வரை பெண்கள் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை ஓராண்டில் 12 முறை பதிவு செய்து 12 சிலிண்டருக்கும் 300 ரூபாய் மானிய தொகை பெற்று வந்தனர் , இனி ஆண்டுக்கு 9 சிலிண்டர்களுக்கு மட்டுமே இந்த 300 ரூபாய் மானிய தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications