பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் டிக்கெட்டில் 20% தள்ளுபடி.. யாருக்கு கிடைக்கும், எப்படி பெறுவது?

சென்னை: இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர் .சவுகரியமான பயணம் ,குறைந்த டிக்கெட் என்பதால் பலரது விருப்பமான போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது.

ரயில் டிக்கெட் சலுகை:அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை வர இருக்கிறது, எனவே பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும் , இந்த நிலையில் மக்களுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யக் கூடிய வகையில் இந்திய ரயில்வே ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக இந்திய ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் டிக்கெட்டில் 20% தள்ளுபடி.. யாருக்கு கிடைக்கும், எப்படி பெறுவது?

டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி: ரயில் பயணிகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு ரவுண்டு டிரிப் பேக்கேஜ் என்ற முறையில் டிக்கெட் சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் அங்கே இருந்து மீண்டும் திரும்பி வர ரவுண்ட் டிரிப் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ரவுண்ட் டிரிப் முறையில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது அவர்கள் திரும்பி வரக்கூடிய பயணத்தின் அடிப்படை கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பண்டிகை கால பயணம்: விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ,ஆயுத பூஜை என அடுத்தடுத்த பண்டிகைகள் வர இருக்கின்றன இதனை முன்னிட்டு பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் இவ்வாறு பயணம் செய்யக் கூடியவர்களுக்கு இந்த சலுகை பயன் தரும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் நாலு பேர் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் திருச்சியில் இருந்து சென்னை திரும்பி வருவதற்கு அதே நாலு பேருக்கு ஒரே சமயத்தில் ரிட்டர்ன் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யும் போது அந்த ரிட்டர்ன் டிக்கெட்டுக்கான கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும்.

ரிட்டர்ன் டிக்கெட்டுக்கு சலுகை: பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்கவும் கடைசி நேரம் முன்பதிவு நெருக்கடியை தவிர்க்கவும் இந்த சிறப்பு ரவுண்டு டிரிப் பேக்கேஜை கொண்டு வந்திருப்பதாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்களுடைய பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள முடியும். சிறப்பு ரயில்களிலும் இந்த 20% தள்ளுபடி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் டிக்கெட்டில் 20% தள்ளுபடி.. யாருக்கு கிடைக்கும், எப்படி பெறுவது?

நிபந்தனை என்ன: வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தான் இந்த ரிட்டர்ன் டிரிப் பேக்கேஜ் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படுகிறது., எனவே 14ஆம் தேதியில் இருந்து தான் இதில் நாம் முன்பதிவு செய்ய முடியும். அதே போல அக்டோபர் 13ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 26ம் தேதிக்கு உட்பட்ட காலகட்டத்தில் புறப்படும் தேதி கொண்ட டிக்கெட்டுகளுக்கும் ,நவம்பர் 17 இலிருந்து டிசம்பர் 1 வரையிலான திரும்ப வரும் தேதிக்கு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த 20 சதவீத தள்ளுபடி என்பது கிடைக்கும்.

யாருக்கு கிடைக்கும்: புறப்படும் போது உள்ள பயணிகளின் எண்ணிக்கையும் அவர்கள் பயணம் செய்யும் வகுப்பும் ரிட்டர்ன் டிக்கெட்டிலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உறுதி செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும், வெயிட்டிங் லிஸ்ட் மற்றும் ஆர் ஏசி பயணிகளுக்கு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சலுகையை பெறுவதற்கு பயணிகள் முதலில் தாங்கள் புறப்படும் தேதியில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் , அதே சமயத்தில் திரும்ப வரும் தேதிக்கான டிக்கட்டையும் முன்பதிவு செய்துவிட வேண்டும்.

எப்படி பெறுவது?: இதில் திரும்ப வரும் பயணத்துக்கான டிக்கெட் கட்டணத்தில் 20% கிடைத்துவிடும். இந்த டிக்கெட்டை ரத்து செய்தால் ரீஃபண்ட் அதாவது டிக்கெட் பணம் திரும்ப கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயணச் சீட்டுகளில் எந்த மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வேயின் வேறு எந்த சலுகை மற்றும் தள்ளுபடி, வவுச்சருடன் இணைத்து பயன்படுத்த முடியாது , ஃபிளெக்ஸி ஃபேர் முறையிலான ரயில் டிக்கெட்டுகளுக்கும் இது பொருந்தாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+