பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்ற திட்டம் ஏப்ரல் 8-ஆம் தேதி 2015-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது, இது எந்தவிதப் பிணையமும் இல்லாமல் கடன் வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில் முனைவோர் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களைப் பெற முடியும். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன்கள் பெற வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC), மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் கோழி பண்ணை, பால் பண்ணை, தேனி வளர்ப்பு போன்ற விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் உட்பட உற்பத்தி வர்த்தகம் மற்றும் சேவை துறைகளுக்கும் கிடைக்கும்.

யாருக்கெல்லாம் கடன் கிடைக்கும்? பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களோ விவசாயம் செய்பவர்களோ பயன்பெற முடியாது. ஏனெனில் விவசாயம் செய்பவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதால், இந்த கடன்கள் முற்றிலும் சிறு குறு தொழில் தொடங்குபவர்களுக்கானது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே சாமானியர்களும் எதிர்காலத்தில் ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பதுதான். இந்த திட்டத்தில் தொழில் தொடர்பவர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் கடன் பெற முடியும்.
சிஷு, கிஷோர், தருண் என 3 வகைகளாக முத்ரா கடன் வழங்கப்படுகிறது. சிஷு திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ. 5,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற முடியும். அதேபோல தருண் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
அக்டோபர் 21, 2024 நிலவரப்படி நடப்பு நிதியாண்டில் 2.15 லட்சம் கோடியை உள்ளடக்கிய 2.24 கோடி முத்ரா கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.09 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று இணையதளத்தின் முத்ரா யோஜனா இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முத்ரா கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: அரசாங்கத்தின் ஜன் சமர்த் போர்ட்டலுக்குச் சென்று, ஸ்கீம் என்ற ட்ராப் டவுன் மெனுவில் இருந்து "Business Activity Loan" என்பதைக் கிளிக் செய்து, "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: புதிய பக்கத்தின் கீழே ஸ்க்ரோல் செய்து, "Check Eligibility" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: நீங்கள் கைத்தறி நெசவாளர் அல்லது துப்புரவு பணியாளர் அல்லது தெருவோர வியாபாரியாக இல்லாவிட்டால் "Other Business Loan" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: புதிய அல்லது ஏற்கனவே உள்ள வணிகம், வணிக வகை, உங்கள் சமூக வகை, இருப்பிடம், உங்கள் முயற்சியைத் தொடங்க அல்லது மேலும் வளர்ப்பதற்கான மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் உங்கள் சொந்த முதலீட்டுத் தொகை போன்ற விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 5: அதன் பிறகு உங்கள் தகுதிக்கான கடன் தொகையை போர்டல் கணக்கிட்டு காண்பிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 2 லட்சமாக இருந்து, நீங்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ. 1.5 லட்சமாக இருக்கும்.
ஸ்டெப் 6: மாதாந்திர EMI மற்றும் கடன் காலம் பற்றிய விவரங்களைப் பெற, "Calculate Eligibility" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 8: பிரைவசி பாலிசி, டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்கள் ஆகியவற்றை ஏற்று "Next" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 9: நீங்கள் வழங்கிய விவரங்களை மதிப்பாய்வு செய்து, "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 10: தேவையான ஆவணங்களைக் காட்டும் விண்ணப்பப் பக்கம் வரும். PAN, Udyam பதிவு மற்றும் ஆதார் விவரங்களுடன் உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 11: போர்டல் உங்கள் GSTIN விவரங்களைப் பெறும். ஆனால் வணிகம் ஜிஎஸ்டி-பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கு ஜிஎஸ்டி பொருந்துமா இல்லையா என்ற விவரத்தை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 12: உங்கள் வணிக விவரங்கள் மற்றும் மாதாந்திர விற்பனைத் விவரங்களை என்டர் செய்து, "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 13: "Verify" என்பதைக் கிளிக் செய்து, அடுத்த பக்கத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை, வணிக முகவரி, ஏற்கனவே கடன் பெற்றுள்ளீர்களா என்ற விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 14: உங்கள் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் போர்டல் பல்வேறு வங்கிகள் வழங்கும் கடன் சலுகைகள் மற்றும் வட்டி விகிதங்களை காண்பிக்கும்.
ஸ்டெப் 15: கடன் பெற "Select Offer" என்பதைக் கிளிக் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியால் உங்கள் கடன் விண்ணப்பம் டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட்டு கடன் வழங்கப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications