மியூச்சுவல் ஃபண்ட் Vs பிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டுக்கு அதிக லாபம்..?

சென்னை: முதலீட்டு உலகில் 2 வகையான முன்னணி முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிக்சட் டெபாசிட் மற்றொன்று மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள். பாதுகாப்பான முதலீடு மற்றும் அதிக லாபத்தை பெற வேண்டும் என்று நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த 2 திட்டங்களும் தான் லாபம் தரக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து எதிலிருந்து அதிக லாபம் பெற முடியும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிக்சட் டெபாசிட்கள் மக்களுக்கான பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் இரண்டாகக் கருதப்படுகின்றன. முதலீட்டாளர்கள் எப்போதும் முதலீட்டிற்கான வருமானம் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல விருப்பங்களை கண்டறிய முயற்சி செய்கிறார்கள்.

 மியூச்சுவல் ஃபண்ட் Vs பிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டுக்கு அதிக லாபம்..?

மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிக்சட் டெபாசிட்கள் முன்னணி விருப்பங்கள் என்பதற்காக இரண்டிலும் நன்மைகள் மட்டுமே இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு திட்டத்திலும் தனிப்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கும்.

FD-கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இரண்டும் மாறுபட்ட வருமானத்தைத் தருகின்றன. FD-களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று நம்பப்படுகிறது, ஆனால் குறைந்த வட்டி காரணமாக, உங்களுடைய கார்பஸ் தொகை மெதுவாகவே வளர்ச்சி அடையும்.

மறுபுறம், மியூச்சுவல் ஃபண்டுகள் அபாயத்தைக் கொண்டுள்ளன. அனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து தொகையை திரும்பப் பெற்றால், முதலீட்டின் வருமானம் மூன்று மடங்காக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகள் கூட்டு வட்டி முறையில் வேலை செய்கின்றன, இது முந்தைய ஆண்டில் உங்கள் முதலீட்டில் பெற்ற வட்டிக்கு அடுத்த ஆண்டில் வட்டி அளிக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளின் நன்மைகளில் இதுவும் ஒன்று.

ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு FD திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய முடிவு செய்கிறார். அதற்கான வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 6.66 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். இந்த வட்டி விகிதம் பெரும்பாலும் தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கு ஒரே மாதிரியாக இருக்கும். 10 ஆண்டுகளுக்கு, வட்டித் தொகை மட்டும் தோராயமாக ரூ.9,82,019 வரை இருக்கும். 10 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, வங்கியிலிருந்து மொத்தம் ரூ.19,82,019 பெறுவீர்கள். எனவே, FD-களில் முதலீடு செய்வதன் மூலம் அசல் தொகையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வருமானம் கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில், நீங்கள் ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீத லாபத்தைப் பெறலாம். இதைத் திரும்பப் பெறும்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் திரட்டிய பணம் சுமார் ரூ.31.06 லட்சமாக இருக்கும். எனவே, நீங்கள் ரூ. 21.06 லட்சத்தை வட்டியாகப் பெறுவீர்கள், மேலும் உங்களுடைய அசல் தொகையை விட வருமானம் மூன்று மடங்காக மாறி இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் வருமானம் அதிகம் இருந்தாலும், அதில் அபாயமும் உள்ளது. அதே நேரத்தில் FD-கள் குறைந்த வட்டி விகிதத்தை மட்டுமே வழங்குகிறது. எனவே உங்களுடைய வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, எந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்? என்பதைத் தெரிந்து கொண்டு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி, அதன் பிறகு முதலீட்டு முடிவுகளை எடுக்கவும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+