சென்னை: இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கும் பல்வேறு நகரங்களுக்கும் இடையிலான சௌகரியமான பயணத்தை மேற்கொள்வதற்கு ரயில் பயணங்கள் தான் உதவிகரமாக இருக்கின்றன.
டிக்கெட் விலையும் குறைவாக இருப்பதால் சாமானிய மக்களுக்கு பிடித்தமான போக்குவரத்து சேவையாக ரயில் சேவைகள் இருக்கின்றன. இந்தியாவில் ரயில்வே டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக ஏஜென்ட்கள் பல்வேறு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வைத்துக்கொண்டு அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனை அடுத்து இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆதார் அங்கீகாரம் என்பது கட்டாயம் என தெரிவித்திருந்தது தற்போது அனைத்து வகையான பொது டிக்கெட் முன்பதிவிற்கும் அது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது .
இதன்படி அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அங்கீகார சரிபார்ப்பு முடித்த பயணிகள் மட்டுமே முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தட்கல் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இருந்த இந்த விதிமுறை தற்போது பொது டிக்கெட் முன்பதிவிற்கும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து அங்கீகார சரிபார்ப்பு முறையை முடித்திருக்க வேண்டும். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று ஒரு ரயில் புறப்படுகிறது அதற்கு நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அக்டோபர் 1ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு முன் பதிவு தொடங்கும். 10 முதல் 10.15 மணி வரை ஆதார் அங்கீகாரத்துடன் ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருக்கக்கூடிய நபர்களால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். 15 நிமிடங்களுக்கு பிறகு தான் மற்றவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் .

நேரடியாக ரயில் நிலையங்களில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆதார் இணைப்பு என்பது கட்டாயம் இல்லை. ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே இது கட்டாயம் . முதலில் உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்த்து வைத்துக் கொள்வது நல்லது.
இதற்கு உங்களுடைய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு செல்லுங்கள் . அதில் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்து கொடுங்கள். கணக்கு இல்லை என்றால் புதிதாக பதிவு செய்து கணக்கு தொடங்கிக் கொள்ளுங்கள் . அதில் My account என்ற பக்கத்தில் authenticate user என்ற பிரிவினை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய ஆதார் எண், பிறந்த தேதி , பாலினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியானதாக நிரப்பப்பட்டு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
இதனை அடுத்து Verify details and receive OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் .அந்த ஓடிபி உள்ளீடு செய்து சப்மிட் கொடுத்தால் உங்களுடைய ஆதார் கணக்கு சரிபார்ப்பு என்பது முடிந்திருக்கும். எனவே நீங்கள் இந்த சரிபார்ப்பு முடிந்தவுடன் டிக்கெட் முன்பதிவில் முதல் 15 நிமிடங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications