விழாக்கால பருவம் தொடங்கி விட்டது. ஆன்லைன் ஷாப்பிங் தொடங்கி, ஆஃப்லைன் ஷாப்பிங் வரையில் களைகட்டத் தொடங்கி விட்டது. குறிப்பாக இ-காமர்ஸ் தளங்கள் பலவும் கேஷ் பேக் ஆஃபர், தள்ளுபடி, நோ காஸ்ட் இ எம் ஐ என பல சலுகைகளை வாரி வழங்க தொடங்கி விட்டன.
விழாக்கால பருவம் என்றாலே பலரின் கவனத்தையும் ஈர்ப்பது நோ காஸ்ட் இஎம்ஐ தான். இதில் செயல்பாட்டுக் கட்டணம், வட்டி என்பது இல்லை என்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனினும் உண்மையில் இதற்கு வட்டி விகிதம் கிடையாதா? அப்படி எனில் வங்கிகளில் இப்படி ஒரு ஆப்சனை எப்படி கொடுக்கப்படுகின்றன. உண்மையில் இது நோ காஸ்ட் இ எம் ஐ தானா? விற்பனையாளர்களுக்கு இதில் என்ன லாபம்? வாடிக்கையாளர்களுக்கு இது பயனுள்ளதா? வாருங்கள் பார்க்கலாம்.
ஜீரோ காஸ்ட் இஎம்ஐ
பொதுவாக இந்த ஜீரோ காஸ்ட் இஎம்ஐ எனப்படும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைக்கு வாடிக்கையாளர்கள், தங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்தாலே போதுமானது. இதன் மூலம் பொருளுக்கான தொகையை மாத தவணை தொகையாக மாற்றி கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் ஆரம்பத்தில் எந்த தொகையையும் செலுத்த தேவையில்லை. பொருளை வாங்கிக் கொள்ளலாம்.
தள்ளுபடி கிடைக்கும்
இதனால் விற்பனையாளர்களுக்கு என்ன லாபம்? வாடிக்கையாளர்களுக்கு லாபம் தானே என நினைப்போம். ஆனால் பேக் எண்ட் ரிபேட் என்ற பெயரில், பொருட்கள் விலையில் குறிப்பிட்ட சதவீதம் பிராண்ட் உரிமையாளர்கள் தள்ளுபடியினை தருவார்கள். ஆக இதன் மூலம் விற்பனையாளர்கள் லாபம் பெறுவார்கள். நோ காஸ்ட் இ எம் ஐ என்பது வாடிக்கையாளர்களை பெரியளவில் ஈர்க்கும் என்பதால், இந்த கமிஷன் தொகையே போதுமானதாக இருக்கும். இந்த கமிஷன் தொகையில் தான் விற்பனையாளர்களும், நிதி நிறுவனங்களும் பகிர்ந்து கொள்வார்கள்.
வங்கிக்கு வங்கி மாறுபடும்
மொத்தத்தில் இந்த நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை மூலம் வட்டி இல்லாமல் பொருளுக்கான விலையினை மாத மாதம் தவணை தொகை மூலம் பெறலாம். எனினும் இந்த நோ காஸ்ட் இ எம் ஐ ஆப்சன் ஆனது வங்கிக்கு வங்கி மாறுபடும். சில நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆரம்பத்தில் குறைந்தபட்ச தொகையை செலுத்த கூறுகின்றன.
சலுகைகள் கிடைக்காது
நீங்கள் இந்த நோ காஸ்ட் இ எம் ஐ ஆப்சனை தேர்வு செய்தால், அதன் மூலம் 3 மாதம் முதல் 24 மாதங்கள் வரையில் தவணையை திரும்ப செலுத்திக் கொள்ளலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் உங்களுக்கு நோ காஸ்ட் இ எம் ஐ தவிர, மற்ற விற்பனையில் தள்ளுபடி, கேஷ் பேக் சலுகைகள் என பலவும் கிடைக்கும். ஆனால் இதில் அப்படி எதுவும் கிடைக்காது.
கவனிக்க வேண்டியவை
சில வங்கிகள் இந்த நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனுக்கு செயல்பாட்டுக் கட்டணம் விதிக்கின்றன. இதன் மூலம் லாபம் பார்க்கின்றன. ஆக நோ காஸ்ட் இஎம்ஐ என்பது கவர்ச்சிகரமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பலவும் உள்ளன. ஆக நீங்கள் ஒரு பொருளை நோ காஸ்ட் இ எம் ஐ ஆப்சனில் வாங்குகிறீர்கள் எனில், அதில் மேற்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications