இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு அடையாள ஆவணம் தான் ஆதார் அட்டை . நம்முடைய முகவரி சான்றாகவும் புகைப்பட அடையாளச் சான்றாகவும் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
அரசின் நலத்திட்டங்களை பெறுவது தொடங்கி பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக கேட்கப்படுகிறது. எனவே நம்முடைய அனைத்து விவரங்களையும் ஆதாரில் அப்டேட் ஆக வைத்திருப்பது நல்லது. ரயில் டிக்கெட் முன்பதிவில் தொடங்கி அனைத்து அரசு சேவைகளுக்கும் ஆதார் அடிப்படையிலான விவரங்கள் சரிபார்ப்பு என்பது கட்டாயமாகியுள்ளது.

போட்டி தேர்வுக்கு சென்றால் கூட ஆதாரை கொண்டு முக அடையாள சரிபார்ப்பு என செய்யப்படுகிறது. மோசடிகளை தடுப்பதற்காகவே பல சேவைகளிலும் ஆதார் அடிப்படையிலான விவரங்கள் சரிபார்ப்பு என்பது மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நாம் எங்கு சென்றாலும் நம் கையில் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு சென்றாக வேண்டும். ஆனால் இனி அதற்கு அவசியம் இல்லை.
இந்தியாவில் ஆதாரை மேலாண்மை செய்யும் யுஐடிஏஐ அமைப்பு புதிய ஆதார் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இனி எங்கு சென்றாலும் உங்களுடைய ஆதார் அட்டையை கையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. குறிப்பாக ஆதார் அங்கீகார சரிபார்ப்புக்கு ஆதார் அட்டை கையில் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. இந்த புதிய ஆதார் செயலியின் மூலம் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் முறையில் உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்படும்.
இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தற்போது எம்ஆதார் என்ற ஒரு செயலலி இருக்கிறது . அதில் நாம் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது, பிவிசி ஆதார் அட்டை கோரி விண்ணப்பம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய ஆதார் செயலி என்பது ஆதார் வாலெட் போல செயல்படும். இதில் நாம் விவரங்களை அப்டேட் செய்ய முடியாது. இந்த செயலியை விர்ச்சுவல் ஆதார் அட்டையாக பயன்படுத்தலாம்.
ஒரே மொபைல் எண்ணில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரின் ஆதார் அட்டைகள் வரை இந்த செயலியில் நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். எங்கெல்லாம் தேவைப்படுகிறது அங்குலாம் இந்த மொபைலில் இருக்கும் இந்த ஆதார் கார்டை காட்டினாலே போதும். குறிப்பாக ஆதாருக்காக கியூஆர் கோடு இதில் இருக்கும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் அல்லது அதிகாரி அதனை ஸ்கேன் செய்து உங்களின் ஆதார் தகவல்களை சரிபார்த்து கொள்வார்.

குறிப்பிட்ட சில சேவைகளை பெறுவதற்கு நம்முடைய ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் சரி பார்ப்பு கட்டாயம். எனவே பொருத்தமான சேவைகளுக்கு மட்டும் உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகள் பகிரப்படுவதை உறுதி செய்யும் வகையில் இதில் நீங்கள் பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்யலாம். இது பயோமெட்ரிக் ஆதண்டிஃபிகேஷன் லாக் என அழைக்கப்படுகிறது. உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களின் பயோமெட்ரிக் தகவல்களை வேறு யாரும் அணுகுவதை இது தடுக்கிறது.
மேலும் ஆதார் தகவல்களை பகிரும்போது என்னென்ன தகவல்கள் மட்டும் பகிர வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக பெயர் புகைப்படம் மட்டும் காண்பித்தால் போதும் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவை தேவை இல்லை என்றால் அவற்றை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்.
வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் சேவை மையங்களில் உங்களுடைய ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது உங்களுக்கு என இதில் இருக்கக்கூடிய ஆதார் க்யூ ஆர் கோடினை காட்டினாலே போதும் அவர்கள் ஸ்கேன் செய்து உங்களுடைய விவரங்களை சரி பார்த்துக் கொள்வார்கள்.
பிளே ஸ்டோரில் aadhaar என டைப் செய்தாலே புதிய செயலி காட்டும். இதனை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் .இதில் உங்களுக்கு விருப்பமான மொழி மற்றும் உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும் . பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டால் போதும் உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் . 6 இலக்க பின் நம்பர் ஒன்றை உருவாக்கிக் கொண்டு உங்களுடைய ப்ரொபைலை லாக் செய்து கொள்ளலாம் .
இதனை அடுத்து நீங்கள் எங்கு சென்றாலும் இண்டர்நெட் இணைப்பே இல்லை என்றால் கூட உங்களுடைய ஆதாரை எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இது உங்களுக்கான ஒரு டிஜிட்டல் வாலெட் போல செயல்படும். எம் ஆதார் செயலியில் உங்களுடைய விவரங்களை மாற்றுவது, அப்டேட் செய்வது , பிடிஎஃப் முறையில் ஆதாரை டவுன்லோட் செய்து கொள்வது , பிவிசி ஆதார் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஆனால் இந்த புதிய செயலி டிஜிட்டல் ஆதார் அட்டையாக செயல்படும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications