இந்தியாவில் பெரும்பாலான அரசு சேவைகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் ஆதார் அட்டை தான் முக்கிய அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது. ஆதார் அட்டையில் நம்முடைய முகவரி ,மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அப்டேட் ஆக வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை அப்டேட் ஆக வைத்திருந்தால் மட்டுமே ஒரு ரயில் டிக்கெட் கூட நம்மால் புக் செய்ய முடியும்.
ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரியாக அப்டேட் செய்து வைத்திருந்தால் மட்டுமே ஓடிபி உள்ளிட்டவற்றை பெற முடியும். பல இடங்களில் நம்முடைய அடையாள சரிபார்ப்புக்கும் ஓடிபி உள்ளிடுவது கட்டாயம். ஒரு வேளை உங்களின் நம்பரை மாற்றிவிட்டீர்கள் அல்லது சிம் கார்டு தொலைந்துவிட்டது எனும் போது புதிய நம்பரை ஆதாருடன் அப்டேட் செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை நாம் மாற்ற வேண்டுமென்றால் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி தான் நம்முடைய மொபைல் எண்ணை மாற்ற முடியும். ஆனால் இனி வீட்டில் இருந்தபடியே ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை நாம் எளிதாக மாற்றலாம். இதற்கு இன்டர்நெட் வசதியும் செல்போனும் இருந்தாலே போதும்.
அண்மையில் புதிய ஆதார் செயலியை அறிமுகம் செய்தது யுஐடிஏஐ அமைப்பு. இந்த ஆதார் செயலியின் மூலம் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்து கொள்ளலாம். இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு நிமிடத்தில் இந்த செயலி வாயிலாக உங்களுடைய மொபைல் எண்ணை உங்களால் அப்டேட் செய்து கொள்ள முடியும். இது எப்படி என்ற என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.இதற்கு உங்களுடைய போனில் புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு கருவிகளிலுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக ஆதார் செயலியை ஓபன் செய்து லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்யும்போது உங்களுடைய ஆதார் எண் கேட்கப்படும். இதனை அடுத்து Services என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் அப்டேட் mobile number update என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் தற்போது பதிவு செய்யப்பட்டு இருக்கக்கூடிய உங்களுடைய மொபைல் நம்பர் காட்டும். அதன் கீழ் நீங்கள் புதிதாக அப்டேட் செய்ய வேண்டிய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
இதனை அடுத்து புதிய நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். ஓடிபி-ஐ நீங்கள் உள்ளிட்டால் போதும் இதனை அடுத்து சரிபார்ப்பு நடைமுறைகள் முடிந்துவிடும். உங்களுடைய மொபைல் எண் அப்டேட்டுக்கான கோரிக்கை யுஐடிஏஐ அமைப்பிடம் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
இதற்காக 75 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இந்த மொபைல் நம்பர் மாறுவதற்கு 30 நாட்கள் வரை தேவைப்படும் என யுஐடிஏஐ அமைப்பு தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications