இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. இதற்கு யுபிஐ பணப்பரிமாற்ற முறை வளர்ச்சி அடைந்திருப்பதே முக்கிய காரணம் . நாம் இங்கு சென்றாலும் எளிதாக கியூ ஆர் கோடு அல்லது மொபைல் நம்பரை வைத்து யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடிகிறது மற்றும் பணம் பெற முடிகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்: இந்த சூழலில் யுபிஐ பண பரிமாற்றங்களை மேலாண்மை செய்து வரக்கூடிய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி வெளிநாட்டில் இருந்தபடியே யுபிஐ முறையில் பணப்பரிமாற்றங்களை செய்ய முடியும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. என்பிசிஐ, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தனியார் வங்கிகளோடு இணைந்து இந்த புதிய வசதியை கொண்டு வந்திருக்கிறது . வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு தங்களுடைய வெளிநாட்டு மொபைல் நம்பரை பயன்படுத்தியே இந்தியாவிற்கான யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ள முடியும்.

இந்திய சிம் கார்டு தேவையில்லை: இதற்காக அவர்கள் தங்கள் போனில் இந்தியாவை சேர்ந்த சிம்கார்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி வெளிநாட்டில் இருந்தபடியே தாய்நாட்டில் இருக்கக்கூடிய தங்கள் குடும்பங்களுக்கு யுபிஐ ஐடி பயன்படுத்தி பணம் அனுப்பலாம் , பில்களை செலுத்தலாம். வாடகை கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வெளிநாட்டு நம்பரே போதும்: இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சராசரி குடிமகன் எப்படி கூகுள் பே, போன்பே , பிம் யுபிஐ போன்ற யுபிஐ வசதிகளை பயன்படுத்துகிறாரோ அதேபோல வெளிநாட்டில் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்களும் பயன்படுத்த முடியும் . இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ வங்கி கணக்குகளை வெளிநாட்டில் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு அனுமதி தந்திருக்கிறது. இதன் காரணமாக அவர்களால் வெளிநாடு நம்பரை கொண்டு யூபிஐ சேவைகளையும் பயன்படுத்த முடிகிறது . முதன்முதலாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வாங்கி தான் இந்த சேவையை கொண்டு வந்திருக்கிறது.
தற்போதைக்கு ஐடிஎப்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமெரிக்கா ,பிரிட்டன் ,ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்களுடைய கணக்கினை இந்த யுபிஐ செயலிகளோடு இணைத்து வெளிநாட்டு மொபைல் நம்பரை பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும் .
எப்படி பயன்படுத்துவது: முதலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவை சேர்ந்த ஏதேனும் ஒரு வங்கியில் என் ஆர் இ அல்லது என் ஆர் ஓ கணக்கினை வைத்திருக்க வேண்டும். அரசு அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஏதேனும் ஒரு நாடுகளில் அவர்கள் தங்கி இருந்து அந்த நாட்டு மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும். இதனை அடுத்து அவர்கள் போனில் கூகுள் பே , போன் பே போன்ற யுபிஐ சேவை வழங்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவர்களுடைய வங்கி கணக்கையும் வெளிநாட்டு மொபைல் எண்ணையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவிற்கு யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும்.
எந்தெந்த நாடுகளில் அனுமதி: தற்போதைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ,ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் ஹாங்காங் ,கத்தார், மலேசியா, சவுதி அரேபியா ,பிரான்ஸ், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வசிக்கக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ சேவையை பயன்படுத்த முடியும் கூடிய விரைவில் இது அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications