நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் செப்டம்பர் 18, 2024 அன்று NPS வாத்சல்யா திட்டம் தொடங்கப்பட்டது. PFRDA அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டம், குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். மேலும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஓய்வூதியச் சேமிப்பைத் தொடங்க NPS வாத்சல்யா திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 9,705 சிறு குழந்தைகளுக்கு கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
NPS வாத்சல்யா திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக PFRDA அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் நாளில் பதிவு செய்யப்பட்ட 9,705 கணக்குகளில், 2,197 கணக்குகள் e-NPS போர்டல் மூலம் திறக்கப்பட்டுள்ளன. NPS வாத்சல்யா திட்டத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நிதி அமைச்சகம் மற்றும் PFRDA-இன் யூடியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் 15,723 பார்வையாளர்கள் பங்கேற்றனர். NPS வாத்சல்யா திட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கு PRAN கார்டு வழங்கப்பட்டது.

NPS வாத்சல்யா என்றால் என்ன?: NPS வாத்சல்யா என்பது இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு நீண்டகால சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெற்றோர்கள், சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI-கள்) தங்கள் குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தொடங்குவதன் மூலம், பெற்றோர்கள் கூட்டு வட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பல ஆண்டுகளுக்கு செல்வத்தை உருவாக்க உதவுகிறது. இந்தத் திட்டம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கிடைக்கிறது. மேலும் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்கு NPS வாத்சல்யா கணக்குகளைத் திறக்கலாம்.
NPS வாத்சல்யாவில் முதலீடு செய்வது எப்படி?: NPS வாத்சல்யா கணக்கைத் திறப்பது நேரடியான செயல்முறை. ஆன்லைன் மூலமாக கணக்கைத் திறக்கலாம்.
ஆன்லைன் செயல்முறை: NPS வாத்சல்யா கணக்கைத் திறப்பதற்கான எளிய வழி e-NPS தளத்தைப் பயன்படுத்துதல்.
NPS இணையதளத்தைப் பார்வையிடவும்: அதிகாரப்பூர்வ தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) இணையதளம் அல்லது பிரத்யேக NPS வாத்சல்யா தளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 1: முகப்புப் பக்கத்தில் அல்லது NPS வாத்சல்யாவுக்கான நியமிக்கப்பட்ட பிரிவில், செயல்முறையைத் தொடங்க "Register" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: மைனர் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலர் பற்றிய விவரங்கள் உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: ஆரம்ப வைப்புத் தொகையாக ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். இதற்குப் பிறகு, PRAN நம்பர் உருவாக்கப்பட்டு, மைனர் பெயரில் அதிகாரப்பூர்வமாக NPS வாத்சல்யா கணக்குத் திறக்கப்படும்.
ஆஃப்லைன் செயல்முறை: பெரிய வங்கிகள், இந்திய அஞ்சல் அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம். இதை நேரிலோ அல்லது அவர்களின் ஆன்லைன் தளங்கள் மூலமாகவோ செய்யலாம்.
கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்: ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பித்தாலும், NPS வாத்சல்யா கணக்கைத் திறக்க பின்வரும் ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
பிறந்த தேதிக்கான சான்று: செல்லுபடியாகும் ஆவணங்களில் பிறப்புச் சான்றிதழ், TC, பான் கார்டு அல்லது மைனரின் பாஸ்போர்ட் ஆகியவை அடங்கும்.
கார்டியனுக்கான KYC: ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை பாதுகாவலர் சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு விவரங்கள்: பாதுகாவலர் என்ஆர்ஐ-யாக இருந்தால், அவர்கள் NRE அல்லது NRO வங்கிக் கணக்கின் விவரங்களை வழங்க வேண்டும். NRI-கள் தங்கள் பாஸ்போர்ட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், வெளிநாட்டு முகவரிச் சான்று மற்றும் வங்கிச் சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications