கடன் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கான முக்கிய தேவையாக மாறிவிட்டது. பொதுவாக நாட்டில் உள்ள முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் ஏதாவது வகையில் கடனை பெற்றிருப்பார்கள். அதிலும் குறிப்பாக இப்போது எளிதில் கிடைக்கக்கூடிய ஆன்லைன் உடனடி கடன் செயலிகள் மூலம் சிலர் பணத்தை கடனாக பெற்று அவற்றை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே இதுபோன்ற நேரங்களில் ஆன்லைனில் கடன் விண்ணப்பிக்கும் போது எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஆன்லைனில் கடன் பெற விண்ணப்பிபவர்கள் சரியான வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களை சரிபார்க்க வேண்டும். இவை ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறப்பட்டதா என்பதை தெரிந்துகொண்டு பின்னர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

உடனடி கடன் பயன்பாடுகளின் விளம்பரங்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றில் மூலம் சில ஏமாற்று வேளைகள் நடந்து வருகின்றன. எனவே, அவற்றின் சலுகைகளை நம்பி நீங்கள் கடன் பெற்றால் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. உடனடி கடன் பயன்பாடுகள் தொடர்பாக எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
செய்யக்கூடிய விஷயங்கள்: ஆராய்ச்சி: கடன் செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதியை பெற்றுள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.
தகுதி: கடன் விண்ணப்பிக்க கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கேட்கும் தகுதி நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
துல்லியமான தகவல்: கடன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள முழுமையான மற்றும் விரிவான தகவல்களை வழங்கவும்.
குட் கிரெடிட் ஸ்கோர்: நல்ல கிரெடிட் ஸ்கோர் கடன் வாய்ப்புகளையும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்கிறது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: கடன் கிடைக்கும் நேரத்தில் உங்கள் ஆர்வத்தில் இவற்றை மறந்துவிடாதீர்கள். வட்டி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமான இதுபோன்ற செயல்களை செய்யும்போது பொது இடங்களில் உள்ள வைஃபையை நெட்வொர்க்கை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ட்ராக் ரெக்கார்டு: நல்ல நற்பெயர் மற்றும் வாடிக்கையாளர் மதிப்புரைகளைக் கொண்ட கடன் வழங்கும் வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும். அதிகம் அறியப்படாதவற்றைத் தேர்வு செய்யாதீர்கள்.
திருப்பிச் செலுத்துதல்: பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் எதிர்கால வாய்ப்புகளையும் கெடுத்துவிடும்.
செய்யக்கூடாதவை: பல கடன்கள்: ஒரே நேரத்தில் பல கடன்களை பெற்றிருப்பீர்களானால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
வருமானத்தை மறைக்க வேண்டாம்: எதிர்காலத்தில் வரும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு சரியான நிதித் தகவலை வழங்கத் தவறினால் கடன்கள் நிராகரிக்கப்பட்டுவிடும். எனவே அது சிரமத்தை கொடுக்கும்
தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல்: க்டன் வழங்குவதாக கூறி மோசடி செய்வதற்கான முயற்சிகள் மோசடி செய்வதற்கான கும்பல் இன்று அதிகரித்து காணப்படுகின்றனர். எனவே, யார் உங்களுக்கு கடன் சலுகைகளை வழங்குகிறார்கள் என்பது தெரியாமல், வரும் அனைத்து விளம்பரங்கள் தேவையற்ற லிங்க்-களில் உள்ளே சென்று வங்கிகள் என நினைத்து ஏமாறாதீர்கள்.
சமீப காலமாக உடனடி கடன் பயன்பாடுகள் அதிக அச்சத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக கோவிட்க்குப் பிறகு இவை அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆன்லைனில் உடனடி கடன் பெறுவதற்காக நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஆவணங்களை சமர்பிக்க வேண்டியதில்லை. வாட்ஸ்அப் ஃபோன் கால் மூலம் மட்டுமே கடன் அனுமதிக்கப்பட்டு உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். சில உடனடி கடன் பயன்பாடுகள் 15 லட்சம் ரூபாய் வரை கடன்களை வழங்குகின்றன. முற்றிலும் டிஜிட்டல் செயல்முறையுடன், இந்த ஆப்ஸ் மூலம் பயனர்கள் தனிநபர் அல்லது வணிகக் கடன்களை ஆண்டுக்கு 12% வட்டி விகிதத்தில் மற்றும் மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல் கொடுக்கப்படுகிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications