பான் கார்டு தொடர்பான மோசடிகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதோடு கைமுறையாக பான் கார்டு பெற விண்ணப்பிப்பதை தவிர்த்து டிஜிட்டல் செயல்முறையை மேம்படுத்தும் நோக்கில் வருமானவரித்துறை பான் 2.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. விண்ணப்பதாரர்களின் மெயில் ஐடிக்கு QR கோடுடன் கூடிய இ-பான் கார்டுகளை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. QR கோடு இல்லாவிட்டாலும் ஏற்கனவே இருக்கும் பான் கார்டுகள் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏற்கனவே இருக்கும் பான் கார்டுகள் செல்லுபடி ஆகாது என்ற வதந்தி பரவி வருகிறது. இது உண்மை கிடையாது. ஏற்கனவே உள்ள பான் கார்டுகள் வழக்கம் போல செயல்படும். பான் 2.0 திட்டம் என்பது வருமானவரித்துறையின் பான் கார்டு வழங்கும் செயல்முறையை டிஜிட்டலுக்கு மாற்றி அமைக்கும் திட்டமாகும். வரி செலுத்துவோர் தங்கள் சேவை தொடர்பான செயல்முறைகளை எளிமைப்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என இந்தியா பயணித்துக் கொண்டிருக்கையில், பான் கார்டு செயல்முறை மட்டும் பேப்பரில் கைமுறையாக இருந்தால் பயனர்களுக்கு எளிதாக இருக்காது என்பதனால் இது போன்ற முன் முயற்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு பான் கார்டு பெறவும், டூப்ளிகேட் பான் கார்டுகள் பெறுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் QR கோடுடன் கூடிய பான் கார்டு பெறுவது எப்படி?: நீங்கள் NSDL மூலம் பான் கார்டு பெற்றிருந்தாலும் அல்லது UTIITSL மூலம் பான் கார்டு பெற்றிருந்தாலும் கீழ்காணும் செயல்முறையை பயன்படுத்தி உங்களுடைய மெயில் ஐடிக்கு QR கோடுடன் கூடிய பான் கார்டைப் பெறலாம்.
ஸ்டெப் 1: முதலில் NSDL இ-பான் போர்ட்டலான https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற போர்ட்டலை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்களுடைய பான் கார்டு நம்பர், ஆதார் கார்டு விவரங்கள், பிறந்த தேதி ஆகியவற்றை வழங்கவும்.
ஸ்டெப் 3: ஏதேனும் ஒரு மெத்தடை பயன்படுத்தி OTP பெறவும். 10 நிமிடங்களுக்குள் OTP வழங்கி "கண்டினியூ" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: புதிதாக பான் கார்டு பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் கோரிக்கை வைத்தால் இலவசமாக சேவை பெறலாம். அதுவே அதன் பிறகு பான் கார்டு பெற நினைத்தால் ஜிஎஸ்டி உட்பட 8.26 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.
ஸ்டெப் 5: வெற்றிகரமாக பணம் செலுத்தி முடித்த பின்னர் 30 நிமிடங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடிக்கு அப்டேட் செய்யப்பட்ட பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் மெயில் ஐடியில் நீங்கள் பான் கார்டை பெறவில்லை என்றால், கட்டண விபரங்களுடன் [email protected] என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 020 27218080 / 020 27218081 என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications