பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்கப்படவில்லை என்றால் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து அந்த பான் கார்டுகள் செயலிழந்து போய்விடும் என வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது.
நம்முடைய நிதி சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் கட்டாயமாக பயன்படுத்தப்படக்கூடிய ஒரு ஆவணம் பான் என்பதால் பொதுமக்கள் தங்களுடைய பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட வேண்டும்.

நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் எண் கட்டாயம் தேவை. வங்கி கணக்கு , குறிப்பாக சம்பள கணக்கு தொடங்கப் போகிறீர்கள் எனும் போது பான் எண் நிச்சயம் கேட்பார்கள். நீங்கள் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கிறீர்கள் அல்லது டெபாசிட் செய்கிறீர்கள் எனும் போது பான் எண் குறிப்பிட்டாக வேண்டி இருக்கும் .
வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் அல்லது தனி நபர் கடன் கேட்டு விண்ணப்பம் செய்யும் போது பான் எண் குறிப்பிட்டாக வேண்டும் . ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் ஒரே முறையில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் கட்டாயம் பான் எண் கொடுக்க வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட அசையா சொத்துகளை நீங்கள் வாங்குகிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் எனும் போது பான் எண் தேவைப்படும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை ஒரு எஸ்எம்எஸ் வாயிலாகவே நம்மால் எளிமையாக இணைத்து விட முடியும். அது எப்படி என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம். முதலில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து UIDPAN என மெசேஜ் செய்ய வேண்டும்.
மேற்கண்ட முறையில் டைப் செய்து அல்லது என்ற எண்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். உதாரணமாக உங்களின் ஆதார் எண் 1234567891011 என வைத்து கொள்வோம், உங்களின் பான் எண் ABCDE1234F எனில் நீங்கள் UIDPAN என டைப் செய்து அல்லது என்ற ஏதேனும் ஒரு எண்ணில் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு இரண்டு ஆவணங்களிலும் உங்களுடைய பெயர் ,பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . அப்படி இருந்தால் உடனடியாக உங்களுடைய போனுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் வரும் இதனை அடுத்து நீங்கள் வரக்கூடிய லிங்கின் மூலம் ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications