டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லை என்றால் உங்களின் பான் செயலிழந்து போய்விடும் என வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் மற்றும் ஆதார் அட்டைகள் இருக்கின்றன.
நம்முடைய நிதி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு மிகவும் முக்கியம். பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கு டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாள். அவ்வாறு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படாமல் போய்விடும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பான் கார்டு செயலிழந்து விட்டால் உங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி அனைத்துமே பாதிக்கப்படும். எனவே உங்களுடைய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுவது நல்லது. இதற்கு பொதுமக்கள் எங்கேயும் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே உங்களுடைய மொபைல் போன் அல்லது லேப்டாப் வாயிலாகவே இந்த வேலையை முடித்துக் கொள்ள முடியும் .
முதலில் உங்கள் பான் உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் quick links என்ற பிரிவின் கீழ் Link aadhaar status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் பான் எண், ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். உங்களின் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
ஆதார் , பான் இணைக்கப்படாமல் இருந்தால் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்தில் quick links என்ற பிரிவின் கீழ் Link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கிளிக் செய்தவுடன் உங்களுடைய பான் மற்றும் ஆதார் எண்ணை அதில் உள்ளீடு செய்ய வேண்டும்.
ஒருவேளை உங்களுடைய பான் கார்டு 2017 ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னர் விநியோகம் செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஆக வேண்டும் . எனவே Continue to Pay Through e-Pay Tax என்பதை கிளிக் செய்து பான் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து வரும் ஓடிபி-ஐ உள்ளிட்டு சரிபார்ப்பை முடித்து Income Tax என்பதில் proceed என்பதை கிளிக் செய்து பணம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய உடன்https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்திற்கே மீண்டும் சென்று லாகின் செய்து link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் நம்பரை உள்ளிட்டு validate என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து வரும் ஓடிபி உள்ளிட்டால் பான் ஆதார் இணைப்பு முடிந்து வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என்ற மெசேஜ் திரையில் காட்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications