ஆன்லைன் & ஆஃப் லைனில் எப்படி PF பணத்தினை எடுப்பது.. இதோ முழு விவரம்..!

கொரோனா காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களை வாழ வைத்தது பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி தான்.

இந்த பிஎஃப் பணத்தினை வைத்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே எடுக்க சில ஆப்சன்கள் உண்டு.

இந்தியாவில் பணிபிரியும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தில் பயனளிக்கும் விதமாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. எனினும் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையை அவசர தேவைக்கு பயன்படுத்தும் ஆப்சனும் உண்டு.

இபிஎஃப் கணக்கு

இபிஎஃப் கணக்கு

பொதுவாக இந்த ஓய்வூதிய திட்டம், ஊழியர்களுக்கு சில ஓய்வுகாலத்திற்காக ஆதாயத்தினை வழங்குவதற்கும், ஒருவேளை துரதிஷ்டவசமாக ஊழியர்கள் இறந்தாலும், அவரது குடும்பத்தினருக்கும் உதவும் விதமாக இந்த திட்டம் உள்ளது. மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும்.

ஆன்லைனில் பெறலாம்

ஆன்லைனில் பெறலாம்

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணபித்து பெற முடியும்.

முன்பெல்லாம் ஒரு ஊழியர்கள் பிஎஃப் பணத்தினை எடுக்க வேண்டும் என்றால், நிறுவனத்தின் கையொப்பம் அவசியம். ஆனால் இன்று அப்படியில்லை. நிறுவனத்தின் கையெப்பம் இல்லாமலேயே பணத்தினை எடுக்கும் வசதி உண்டு.

என்னென்ன காரணங்களுக்காக எடுக்கலாம்?

என்னென்ன காரணங்களுக்காக எடுக்கலாம்?

குறிப்பாக திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு.

இதற்காக நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

ஆன்லைனில் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி?

ஆன்லைனில் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி?

இதற்காக நீங்கள் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN மற்றும் கொடுத்து லாகின் செய்யவும். அதன் பிறகு க்ளைம் என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

இது அடுத்த புதிய பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும். அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும். அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும்.

ஓடிபியை பதிவிடுங்கள்

ஓடிபியை பதிவிடுங்கள்

அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பின்பு உங்களுக்கு உங்களது பிஎஃப் தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.

உமாங்க் ஆப் மூலம் எடுக்கலாம்?

உமாங்க் ஆப் மூலம் எடுக்கலாம்?

உங்களிடம் பிஎஃப் கணக்கில் இருந்து UMANG App-ஐ பயன்படுத்தியும் எளிதாக பணத்தை எடுக்கலாம். இதற்காக உங்களது ஸ்மார்ட்போனில் UMANG App டவுன்லோட் செய்ய வேண்டும். அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.

அதில் Employee Centric services என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Raise Claim என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN Number- ஐ பதிவிட வேண்டும்.

அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password-ஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். எனினும் அரசின் இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாருடன் UAN Number, UMANG App, மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆஃப் லைனில் எப்படி?

ஆஃப் லைனில் எப்படி?

வித்டிராவல் பார்மினை பூர்த்தி செய்து விண்ணபிக்க வேண்டும். இது ஆதார் அல்லது ஆதார் அல்லாத என இரு வகையான பார்ம்கள் உள்ளது. ஆதாருடன் உங்கள் பிஎஃப் கணக்கு சமர்பிக்கபடவில்லை எனில், அதனை நிறுவனத்தின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+