PhonePe கொண்டு வந்த யுபிஐ சர்க்கிள்! பேங்க் அக்கவுண்ட் இல்லாம அசால்ட்டா பணம் அனுப்பலாம்!

இன்றெல்லாம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தான் அதிகம் செய்யப்படுகிறது. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று பணம் எடுப்பது, பணத்தை பிறருக்கு போடுவது போன்ற விஷயங்களை செய்யமால் மக்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக செய்கின்றனர். அதற்கு ஏதுவாக யுபிஐ தளங்களில் புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் போன்பே நிறுவனம் "UPI சர்க்கிள்" என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சத்தின் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஆட்களை போன்பே அக்கவுண்டுடன் இணைக்க முடியும். இதன் மூலம் அந்த UPI சர்க்கிளில் இருக்கும் நபர்கள் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியும். இதைத்தான் "டெலிகேடட் பேமென்ட்" என்று கூறுவர்.

 PhonePe கொண்டு வந்த யுபிஐ சர்க்கிள்! பேங்க் அக்கவுண்ட் இல்லாம அசால்ட்டா பணம் அனுப்பலாம்!

UPI சர்க்கிளில் உள்ள நபர்கள் சொந்தமாக தங்களுக்கென யூபிஐ ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அவர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டல் சேவைகளை பெறுவதற்கு சிரமம் உள்ளவர்கள் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள யுபிஐ சர்க்கிள் உதவும்.

யுபிஐ சர்க்கிள் எவ்வாறு செயல்படும்?: இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் வலைதள தகவல்படி, யுபிஐ சர்க்கிள் என்பது ஒரு யுபிஐ பயனர், தங்கள் வங்கி கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்வதற்கான அங்கீகாரத்தை மற்றொருவருக்கு வழங்கும் ஒரு புதிய அம்சமாகும். இதனால் அவர் அங்கீகாரம் கொடுக்கும் நபர், அங்கீகாரம் வழங்கியவரின் வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால் இதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.

உதாரணமாக ஒரு பயனர் யுபிஐ பயன்படுத்தி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பிரைமரி யூசர். இவர் யார் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அவர்களை யுபிஐ சர்க்கிளில் இணைக்கலாம்.

இதன் மூலம் ப்ரைமரி யூசரின் யுபிஐ கணக்கிலிருந்து மற்றொருவர் பணம் அனுப்ப அனுமதிக்க முடியும். பிரைமரி யூசர் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி யுபிஐ மூலமாக பணம் அனுப்புபவர்கள் தான் செகண்டரி யூசர். இவர்களுக்கு வங்கி கணக்கு இருந்தாலும் சரி வங்கி கணக்கு இல்லை என்றாலும் சரி.. யுபிஐ சர்க்கிள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

போன்பே அப்ளிகேஷனில் யுபிஐ சர்க்கிள் எவ்வாறு செயல்படும்?: 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பயன்படுத்தலாம். பிரைமரி யூசர் யாரை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் வழங்க வேண்டுமோ? அவர்களைத் தேர்ந்தெடுத்து யுபிஐ ஐடி மூலம் இணைக்கலாம். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்தும் போது அங்கீகாரம் வழங்கும் பிரைமரி யூசரிடம் தான் அனைத்து கண்ட்ரோலும் இருக்கும். அவர்களை மீறி பணம் அனுப்பவோ அல்லது செலவு செய்யவோ முடியாது. யுபிஐ சர்க்கிளில் இணைத்தவர்களை உடனடியாக நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

போன்பே அப்ளிகேஷனில் யுபிஐ சர்க்கிள் ஆப்ஷனை எவ்வாறு பயன்படுத்துவது?:

ஸ்டெப் 1: போன் பே அப்ளிகேஷனை திறந்து கொள்ளுங்கள். ஹோம் பேஜில் "எனேபிள் யுபிஐ "சர்க்கிள் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்டெப் 2: யுபிஐ சர்க்கிள் அமைத்து செகண்டரி பயனர்களை இணைக்க "இன்வைட் செகண்டரி காண்டெக்ட்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதை நீங்கள் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து செய்யலாம். இல்லையேல் அவர்களுடைய யுபிஐ ஐடியை கைமுறையாக டைப் செய்யலாம்.

ஸ்டெப் 3: போன் பே பயனர்கள் தங்கள் போனில் பெறப்பட்ட இன்வைட் லிங்கை ஏற்று யுபிஐ சர்க்கிளில் சேர வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+