ஒரு லட்சம் ரூபாய் மூலதனம் இருந்தாலே இந்தியாவில் பல்வேறு சிறு தொழில்களை தொடங்கி நடத்த முடியும். ஆனால் இந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது பலருக்கும் பெரிய தொகை. ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஆசை இருக்கிறது , அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய சிறந்த ஐடியா இருக்கிறது ஆனால் அதற்கான மூலதனம் இல்லை என்பவர்களுக்காகவே மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு சிறுதொழில் செய்பவர்கள் குறிப்பாக தெருவோர வியாபாரிகளுக்கு வட்டி மானியத்துடன் சிறப்பான கடன் திட்டங்களை செயல்படுத்துகிறது. பெரும்பாலான சிறு வணிகர்கள் கடன் தேவைக்கு கந்து வட்டி உள்ளிட்டவற்ற்இல் சென்று சிக்கி கொள்கிறார்கள். அவர்களை காப்பாற்றவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் பிரதமர் ஸ்வநிதி திட்டம்.

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் எதையும் பிணையாக வைக்காமலேயே கடன் பெற முடியும். அதாவது எந்த ஒரு பொருளையும் அடமானம் வைக்காமல் எந்த பிணயமும் இல்லாமல் கடன் பெறலாம். 90,000 ரூபாய் வரை கடன் கிடைக்கும். இந்த கடன் தொகை நேரடியாக அந்த நபரின் வங்கி கணக்கிறேகே சென்றுவிடும்.
தெருவோரங்களில் வியாபாரம் செய்வார்கள், சிறு சிறு கடைகளை நடத்துபவர்களை இலக்காக கொண்டு தான் மத்திய அரசின் திட்டத்தையே வரையறுத்திருக்கிறது. இந்த திட்டத்தில் மூன்று தவணைகளாக கடன் தொகை பயனாளியின் கணக்கில் வர வைக்கப்படும். முதல் கட்டமாக 15,000 ரூபாய் அதன் பிறகு 25,000 ரூபாய் அதன் பிறகு 50,000 ரூபாய் என படிப்படியாக கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசு இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு 15,000 கோடி ரூபாய் வரை கடன் தந்திருக்கிறது.

மொத்தமாக 90 ஆயிரம் ரூபாய் வங்கி கடனாக பெறலாம். இந்த கடன் தொகையை சரியான நேரத்தில் திரும்ப செலுத்துபவர்களுக்கு வட்டியிலும் ஏழு சதவீதம் வரை மானியம் இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட அளவு வட்டியை மத்திய அரசே செலுத்தி விடும்.
இதற்கு விண்ணப்பம் செய்ய உங்களின் ஆதார் அட்டை அவசியம், அடுத்ததாக நீங்கள் எந்த இடத்தில் கடை வைத்திருக்கிறீர்களோ அதற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமிருந்து ஒரு சான்றிதழ் அல்லது அடையாள அட்டையை பெற்றெடுக்க வேண்டும். ஒருவேளை உள்ளாட்சி அமைப்பின் கணக்கெடுப்பில் உங்கள் கடை இல்லை என்றால் அதிகாரிகளின் பரிந்துரை கடிதத்தை ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
https://pmsvanidhi.mohua.gov.in/ இந்த இணையதளத்திற்கு சென்று அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும் 30 நாட்களில் உங்களுடைய விண்ணப்பம் செயல்படுத்தப்பட்டு கடன் தொகை உங்கள் கணக்கிற்கு வந்து சேரும். 2030ஆம் ஆண்டு வரை இந்த கடன் திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications