பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY 2.0) இரண்டாம் பதிப்பை சமீபத்தில் தொடங்கியது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வீட்டு வசதிக்கான நிதி உதவி வழங்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி PMAY அர்பன் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 1.18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 8.55 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் PMAY அர்பன் 2.0 திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கும் ஆன்லைன் செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது. தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

சொந்த வீடு என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இந்தக் கனவை நிறைவேற்ற பலரும் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் சிலருக்கு தங்கள் கனவை நிறைவேற்ற முடிவதில்லை. இன்னும் நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பதற்காக இந்திய அரசு உதவி வருகிறது. அதற்காகத்தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2017-ஆம் ஆண்டில் அரசு தொடங்கியது. இதன் கீழ் இந்திய அரசு ஏழை எளியவர்களுக்கு வீடு கட்ட உதவி வருகிறது.
2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) வெளியிட்ட அறிக்கையின் படி நலிவடைந்த பிரிவினர் (EWS), குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (LIG) மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குழுக்கள் (MIG) போன்ற பிரிவுகளில் உள்ள இந்திய குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடையலாம்.
2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை PMAY அர்பன் 2.0 திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் ரூ.2.30 லட்சம் வரையிலான மானியத்துடன் 1 லட்சம் மலிவு விலையிலான வீடுகளைக் கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் சில வருமான வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
வருமான வரம்புகள்:
EWS பிரிவினர்: ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை
LIG பிரிவினர்: ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரை
MIG பிரிவினர்: ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை
விண்ணப்பதாரர்கள் தகுதிபெற இந்தியாவில் எங்கும் சொந்தமாக வீடு வைத்திருக்கக்கூடாது.
பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, ஆதார் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்டு, வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தங்கள் நிலத்தில் வீடு கட்டுபவர்களாக இருந்தால் நில உரிமை ஆவணங்கள் தேவைப்படும்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா 2.0 திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ PMAY இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில் இருக்கும் "Apply for PMAY-U 2.0" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: விண்ணப்ப செயல் முறையை தொடங்குவதற்கு முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொண்டு திட்டத்தின் வழிகாட்டுதல் குறித்தும் கவனமாக ஆய்வு செய்யவும்.
ஸ்டெப் 4: PMAY அர்பன் 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உங்கள் தகுதியை சரிபார்க்க ஆண்டு வருமானம் மற்றும் இதர விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 5: ஆதார் சரிபார்ப்பு செயல்முறை முடிப்பதற்காக உங்கள் ஆதார் எண்ணை வழங்கவும்.
ஸ்டெப் 6: உங்களுடைய முகவரி, வருமானம் மற்றும் தேவையான பிற தகவல்களை விண்ணப்ப படிவத்தில் துல்லியமாக நிரப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து உங்கள் விண்ணப்பநிலையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எளிதில் PMAY அர்பன் 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications