இந்திய அரசு வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் அஞ்சலகத்தில் இ - பாஸ்புக் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய அஞ்சலகத் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்த திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் பரிவர்த்தனைகள், இருப்புகளை தெரிந்து கொள்ள வசதியாக பாஸ்புக் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இ பாஸ்புக்
தற்போது இந்த பாஸ்புக் வசதியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, இ-பாஸ்புக் வசதியை அஞ்சலகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பாஸ்புக்கினை எளிமையாக மொபைல் எண் மூலம் கையாளாவும், இ பாஸ்புக் வசதியினை அஞ்சலகம் அறிமுகம் செய்துள்ளது.
இணைய சேவை இல்லாமல் எளிதில் பரிவர்த்தனை
இ-பாஸ் புக் மூலம் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற எந்த வசதியும் இல்லாமல், எங்கிருந்தும் எந்த நேரமும் சேமிப்பு கணக்குகளின் இருப்புத்தொகை , அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கின் முழுமையான பரிவர்த்தனை மூலம் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இ பாஸ் புக் லிங்க்
அஞ்சலகத்தின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட அஞ்சலகத்தின் மொத்த பரிவர்த்தனை விவரங்களையும் பார்த்துக் கொள்ளலாம். அஞ்சலகத்தில் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் இ பாஸ்புக் வசதிக்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த இ பாஸ்புக் வசதியினை பெற சேமிப்பு கணக்குகளில், வாடிக்கையாளரின் மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.
இதற்கான அஞ்சலகத்தின் ஆப் மூலம் லாகின் செய்ய வேண்டும்.
அதில் Go To mobile banking
அடுத்ததாக உங்களது கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்
அதன் பிறகு GO பட்டனை கிளிக் செய்யவும்
இதன் பிறகு உங்களது கணக்குள்ள பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்
அங்கு நீங்கள் பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கிளிக் Statement
அங்கு மினி ஸ்டேட்மென்ட் அல்லது அக்கவுண்ட் ஸ்டேட் ஆப்சன் இருக்கும். ஆக அதில் உங்களுக்கு தேவையானது கொடுக்கலாம்.
ஸ்டேட்மெண்ட் ஆப்சனை கிளிக் செய்கிறீர்கள் எனில், அங்கு எத்தனை காலம் என்பதை பதிவிட வேண்டும்.
அந்த ஸ்டேட்மெண்டினை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். அது உங்களது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications