பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம் 7.5% வட்டியில்! டைம் முடியப் போகுது! சீக்கிரம் கிளம்புங்க!

நாட்டு மக்களின் நலனைக் காக்க மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகள் மூலம் நமக்கு கிடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings Certificate - MSSC). இந்தத் திட்டம் பிரத்தியேகமாக பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தப் பதிவில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்றால் என்ன?: இந்தத் திட்டம் பெண்களுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். MSSC திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும் அதற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.

 பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம் 7.5% வட்டியில்! டைம் முடியப் போகுது! சீக்கிரம் கிளம்புங்க!

பெண்கள் நீண்ட காலமாக தங்கத்தில் மட்டும்தான் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதக்கூடாது. மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு பெண்கள் முன் வரவேண்டும் என்பதற்காக 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டம் ஆகும். இது 2025-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை இந்தத் திட்டத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.

தகுதி: MSSC பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சேமிப்பு திட்டம். எனவே, ஆண்கள் முதலீடு செய்ய முடியாது. இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வட்டி விகிதம்: தற்போது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

அதிகபட்ச டெபாசிட்டுக்கு எவ்வளவு வருமானம்?: ஒரு பெண் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் அதிகபட்ச தொகையான ரூ.2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 2 வருட முதிர்வு காலத்திற்கு பிறகு வட்டியாக ரூ.32,044 கிடைக்கும். இதன் மூலம் உங்களின் மொத்த முதிர்வுத் தொகை ரூ.2,32,044 ரூபாயாக இருக்கும்.

விதிமுறைகள்: இந்தத் திட்டத்தை தொடங்கிய பெண் துரதிஷ்டவசமாக காலமானால், அவருடைய சார்பில் நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்கள் டெபாசிட் தொகையை பெறலாம். அதேபோல உயிருக்கு ஆபத்தான நோய்கள் இருந்தாலும் டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும். அதே போல மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கும் வட்டியை மாற்றி அமைக்கும். இந்த வட்டி விகிதம் மொத்த வட்டி விகிதத்தில் 2 சதவீதம் குறைந்தால் கணக்கை மூடிக்கொள்ளலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: பொதுவாக விண்ணப்ப செயல்முறை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் நடத்தப்பட்டாலும், சில வங்கிகள் இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை வழங்கியுள்ளனர்.

ஸ்டெப் 1: விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்களிடம் தேவையான ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணமாக ஆதார் கார்டு, பான் கார்டு, முகவரி சான்று போன்றவை தேவைப்படலாம்.

ஸ்டெப் 2: உங்கள் வங்கியின் இணையதளத்தை பார்வையிடுங்கள். உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் பேங்கிங் செயலியில் உள்நுழைய வேண்டும்.

ஸ்டெப் 3: உங்கள் வங்கியின் இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷனில் சேமிப்பு அல்லது முதலீடு என்ற பிரிவுகளின் கீழ் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் இருக்கிறதா? என்பதைத் தேடுங்கள்.

ஸ்டெப் 4: அதன் பிறகு எப்பொழுதும் போல விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். பிறகு நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தவும்.

ஸ்டெப் 5: பணம் செலுத்திய பிறகு உங்கள் முதலீட்டை உறுதிப்படுத்துவதற்கான மெசேஜ் அல்லது மெயில் உங்களுக்கு வரலாம். மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் உங்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும். எப்படி கிசான் விகாஸ் பத்திரா திட்டங்கள் செயல்படுகிறதோ அதேபோல இதுவும் ஒரு பத்திரம். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பத்திரமாக கிடைக்கும். அதை நீங்கள் வங்கியின் போர்ட்டலில் இருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+