ப்ரீ அப்ரூவ்டு பர்சனல் லோன் குறித்து நீங்க கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

நீங்கள் பர்சனல் லோன் வாங்க முயற்சி செய்திருந்தால் உங்களுக்கு பல ப்ரீ அப்ரூவ்டு பர்சனல் லோன் ஆபர்கள் வந்து குவியும். ப்ரீ அப்ரூவ்டு பர்சனல் லோன் என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் அதைப்பற்றி இந்தக் கட்டுரையில் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

ப்ரீ அப்ரூவ்டு பர்சனல் லோன் என்றால் என்ன? இந்த ஆபரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா? அது பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
தகுதியான கிரெடிட் ஸ்கோர் இருக்கும் நபர்களுக்கு தரப்படும் ப்ரீ அப்ரூவ்டு லோன் என்பது வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் அளிக்கும் குறுகிய கால கடன் சலுகையாகும்.

ப்ரீ அப்ரூவ்டு பர்சனல் லோன் குறித்து நீங்க கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

வழக்கமான பர்சனல் லோன் போல் இல்லாமல் இந்த சலுகைகள் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தரப்படுபவை. கடன் தரும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அவருக்கு இந்த ஆபர் தரப்படும்.

கடன் தரும் நிறுவனத்தில் நீண்ட நாள் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு கீழ்கண்ட அம்சங்கள் இருந்தால் ப்ரீ அப்ரூவ்டு லோன்கள் கிடைக்கும்:
-சராசரிக்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோர்
- நல்ல வங்கி இருப்பு
- சேமிப்பு உள்ளவர்கள்
- நல்ல வருமானம்
- ஒழுங்காக கடன்களை திரும்பச் செலுத்தியவர்கள்

இப்போது கணக்கு வைத்துள்ள உங்கள் வங்கியில் ப்ரீ அப்ரூவ்டு லோன்களை பெற தகுதி இருக்கிறதா என்பதை உங்களது நெட்பேங்கிங்கில் எளிதாக சரி பார்க்கலாம். ஹோம் லோன், கார் லோன், பைக் லோன், சில வங்கியில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு கூட இந்த லோன் அளிக்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு தான் ப்ரீ அப்ரூவ்டு லோன்கள் வழங்கப்படும் என்பதால் இதற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறை சிக்கல் இல்லாதது. ஆவணங்களும் அதிகளவில் தேவைப்படாது. இருப்பினும் நீங்கள் கணக்கு வைக்காத வங்கியில் இந்த கடனைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களை அளிக்க வேண்டும்:

-கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மென்ட்
-கடந்த 3 மாதங்களுக்கான சம்பள ரசீது
- அடையாள சான்று
- முகவரி சான்று
- பான் எண்

ப்ரீ அப்ரூவ்டு லோன்களுக்கு விண்ணப்பிப்பதில் பல நன்மைகள் உள்ளன.
உங்களது கிரெடிட் தன்மையை வங்கிகள் சரி பார்த்திருக்கும் என்பதால் உங்களது ப்ரீ அப்ரூவ்டு லோன்கள் விரைவில் ப்ராஸஸ் செய்யப்பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே பணம் கைக்கு வந்து விடும். உடனடியாகவும் உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு விடும்.

இந்த லோன்களை வங்கிகளே முன்வந்து தருவதால் அதற்கான வட்டி விகிதமும் மிகக் குறைவாகவே இருக்கும். கடனை திரும்பச் செலுத்தவதற்கு பல சலுகையான முறைகளும் இருக்கும். இந்தப் பணத்தை நீங்கள் எந்தக் காரியத்துக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அத்துடன் உங்களால் செலுத்தக்கூடிய மாதத் தவணைகளை தேர்ந்தெடுக்கலாம்.

எஸ்எம்எஸ் அல்லது போன்கால் மூலம் நீங்கள் இந்த கடன் சலுகையைப் பெற்றிருந்தால் விண்ணப்பத்தை உடனடியாக ப்ராஸஸ் செய்ய கூறலாம். வங்கிகளின் ரெப்ரசன்டேடிவ் மூலாகவும் பிராசஸை செய்யலாம்.
இத்துடன் உங்களது தகுதியை அறிந்து நெட்பேங்கிங் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ப்ரீ அப்ரூவ்டு பர்சனல் லோன் குறித்து நீங்க கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

விண்ணப்பிக்கும் முறை:
- உங்கள் நெட்பேங்கிங்கை லாகின் செய்யவும்
- loans செக்ஷனுக்கு சென்று pre-approved loans என்ற பட்டனை தேர்வு செய்யவும்
- apply now பட்டனை அழுத்தவும்
- அதில் வரும் பாப் அப் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான லோன் வகையை தேர்வு செய்யவும்
-விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சப்மிட் செய்யவும்
இப்போது நீங்கள் விரைவான ப்ரீ அப்ரூவ்டு லோனுக்கு தயாராகி விட்டீர்கள். இது பற்றிய கூடுதல் தகவல்கள்:
- ப்ரீ அப்ரூவ்டு ஆபர்கள் உங்களுக்கான குறிப்பிட்ட காலத்துக்கான அழைப்பு ஆகும். குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் விண்ணப்பித்தால் அது ப்ராசஸ் செய்யப்படும்.
-உங்களுக்கு குறைவான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டாலும் நீங்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் பிற லோன்களுடன் இதை ஒப்பிட வேண்டும்.
-இதற்கு கட்டணங்கள் விதிக்கப்படலாம். இதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் ஜீரோ ப்ராசஸிங் கட்டணம் கேட்கலாம். இதுபற்றி வங்கிகள் தான் முடிவெடுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+