சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பயோமெட்ரிக் விவரங்களைத் தற்காலிகமாக லாக் செய்து கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆதார் கார்டை வைத்து நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க முடியும். இந்தப்பதிவில் எவ்வாறு உங்களுடைய பயோமெட்ரிக்ஸை லாக் செய்து வைப்பது என்பதைப் பார்ப்போம்.
ஆதார் கார்டு KYC சரிபார்ப்புக்கு பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது. பேங்க் பரிவர்த்தனை முதல் முதலீட்டுத் திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. எனவே, இதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்துவதையும், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதையும் தடுப்பது முக்கியம்.

ஆதார் வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய பயோமெட்ரிக்ஸை லாக் செய்து வைக்க முடியும். இதனைச் செய்வது எதற்காக என்று பார்த்தால், ஆதார் தொடர்பான மோசடிகள் சில காலமாக, அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆதலால், அதனைத் தடுக்கும் விதமாக UIDAI, இது போன்ற அம்சங்களை வெளியிடுகிறது.
ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்வதால், உங்களுடைய ஆதார் சான்றுகளை யாரும் சட்டவிரோதமாக பயன்படுத்தி எந்த ஒரு மோசடியிலும் ஈடுபட முடியாது.
உங்கள் பயோமெட்ரிக்ஸை UIDAI இணையதளம் மூலம் எவ்வாறு லாக் செய்வது?:
ஸ்டெப் 1: அதற்கு முதலில் UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு "Aadhaar Services " என்ற பிரிவின் கீழ் "Lock/Unlock Biometrics" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: தற்போது வெப்சைட்டின் அடுத்த பக்கத்திற்கு, உங்களை அழைத்துச் செல்லும். அங்கு "Next" என்பதைக் கிளிக் செய்தால் வேறு ஒரு பக்கம் திறக்கப்படும்.
ஸ்டெப் 4: அதில் உங்களுடைய விர்ச்சுவல் ஐடி, பெயர், பின்கோடு, கேப்சா குறியீடு ஆகியவற்றை என்டர் செய்து, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட, உங்கள் மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். அதன் பின் OTP கொடுத்து உள்நுழையவும். அதன் பின் "Enable" என்பதை கிளிக் செய்யவும்.
இதே ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி, நீங்கள் திரும்பவும் உங்களுடைய ஆதார் பயோமெட்ரிக்ஸை அன்லாக் செய்யலாம். மேலும் இந்த ஆப்ஷனை நீங்கள் "Disable" செய்ய விரும்பினால் அதையும் நீங்கள் செய்து கொள்ளலாம்.
mAadhaar செயலியில் ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: mAadhaar செயலியை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: ஆப்-ஐ ஓபன் செய்து உங்கள் மொபைல் நம்பரைப் பயன்படுத்தி லாகின் செய்யவும்.
ஸ்டெப் 3: "My Aadhaar" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் ஆதார் நம்பர், கேப்ட்சா குறியீடு மற்றும் OTP ஆகியவற்றை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்ய "Biometric Lock" என்பதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications