சென்னை: சொத்து பிரச்சினைகள் ஒற்றுமையாக வளர்ந்த சகோதர சகோதரிகளை கூட பிரித்து விடுகின்றன. சில சமயங்களில் இந்த சொத்து பிரச்சினைகள் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன.
பெற்றோர் தாங்கள் இருக்கும் போதே சொத்துக்களை சுமூகமாக பிரித்து பிள்ளைகள் பெயரில் எழுதி வைப்பது அல்லது யாருக்கு சொத்து எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதை உயிலாக எழுதி வைப்பது ஆகியவை எதிர்காலத்தில் பிள்ளைகள் இடையே பிரிவினையை ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். சொத்து பிரிப்பது அல்லது ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுவதில் முக்கியமான நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

உயில்: ஒரு நபர் தனக்கு பின்னர் தன்னுடைய சொத்து யாருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே விருப்பத்தின் பேரில் எழுதி வைக்கும் ஆவணம் தான் உயில். இது அந்த நபர் சுயமாக சம்பாதித்த சொத்தாக இருக்க வேண்டும், பூர்வீக சொத்தாக இருக்க கூடாது. தன்னுடைய சம்பாத்தியத்தில் கிடைத்த சொத்துகள் தனது இறப்புக்கு பின்னர் எந்த சிக்கலும் இல்லாமல் தனக்கு பிடித்தவருக்கு செல்ல வேண்டும் என சுயநினைவோடு எழுதி வைப்பார். தனது வாரிசுகளுக்கு தான் சொத்தை எழுதி வைக்க வேண்டும் என கட்டாயமில்லை, நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றுக்கு கூட எழுதி தர முடியும்.
பாகம் பிரித்தல்: தந்தை வழியே வந்த சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்து எழுதி தருவது தான் பாகப்பிரிவினை ஆகும். குடும்ப சொத்தினை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்த்து பேசி , அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தின் அதிகாரப்பூர்வ வாரிசுகளின் சம்மதத்தோடு சொத்தினை பிரிப்பது ஆகும். இந்த முறையில் சொத்து பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாரிசுகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டு விடும். உடன்பாடு ஏற்பட சில சமயம் ஊர் பெரியவர்களை வைத்து மத்தியஸ்தம் செய்வதை நாம் கிராமங்களில் பார்க்க முடியும், சிலர் இதனை ஏற்காமல் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்கின்றனர்.
தான பத்திரம்: உறவுகளுக்குள் சொத்து உரிமையை மாற்றி தருவது தான் தான பத்திரம் என அழைக்கப்படுகிறது. தந்தை பிள்ளைகளுக்கும் அல்லது சகோதரர்கள் சகோதரிக்கும், சகோதரி சகோதரருக்கும் என ஒரு சொத்தின் உரிமையை மாற்றம் செய்து தர முடியும். நெருங்கிய குடும்ப உறவு முறைகளில் இது செய்யப்படுகிறது. பணம் எதுவும் வாங்கி கொள்ளாமல் என் பெயரில் இருக்கும் சொத்தின் உரிமையை மற்றவருக்கு மாற்றி தருவதே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
உயில், தான பத்திரம், பாகப் பிரிவினை இவை அனைத்தையும் நாம் பதிவு துறையில் ஆவணமாக பதிவு செய்துவிட வேண்டும். அப்போது தான் அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications