டெல்லி: ஆதார் அட்டை இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காகட்டும் ஒரு வங்கி கணக்கு தொடங்குவது டிமேட் கணக்கு தொடங்குவது என அனைத்திற்குமே நம்முடைய ஆதார் கார்டை நாம் புகைப்பட அடையாளமாகவும் முகவரிக்கான அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.
ஐஆர்சிடிசி கணக்கு வாயிலாக நாம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் கூட தற்போது ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் போலி ஆதார் அட்டைகள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், போலி ஆதார் அட்டைகளை வைத்து பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இத்தகைய மோசடிகளை தடுப்பதற்காக தற்போது ஒரு புதிய வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மக்கள் உங்களிடம் ஒரு ஆவணமாக தாக்கல் செய்யக்கூடிய ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதாக என்பதை எளிதாக கண்டறியும் வசதியை இந்திய தனித்துவ அடையாள அமைப்பான UIDAI அறிவித்துள்ளது.
நமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆதார் அட்டைகளுமே க்யூ ஆர் கோடு கொண்டிருக்கும். நாம் ஆதார் அட்டையை கையில் வைத்திருந்தாலும் சரி, அல்லது சாஃப் காபியாக போனில் வைத்திருந்தாலும் சரி அதில் கட்டாயம் ஆதார் எண்ணுக்கான நம்முடைய விவரங்கள் அடங்கிய கியூ ஆர் கோடு இடம் பெற்றிருக்கும். என்கிரிப்டட் முறையில் தகவல்கள் இதில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கியூஆர் கோடினை ஸ்கேன் செய்தாலே அந்த நபரின் பெயர் புகைப்படம் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் தெரிந்து விடும். எனவே ஒரு ஆதார் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய இந்த வசதி பயன்படும் என தெரிவித்து இருக்கிறது. இதற்காக மக்கள் எம் ஆதார் செயலியை தங்களுடைய மொபைல் போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் அல்லது யுஐடிஏஐ அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆதார் கியூ ஆர் கோடு ஸ்கேனர் என்று கருவி இணைக்கப்பட்டிருக்கிறது இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம் .
கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தால் ஆதார் அட்டை யாருக்கு சொந்தம், அவருடைய பெயர் ,பிறந்த தேதி மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்கள் காட்டிவிடும். ஒருவேளை விவரங்கள் தவறாக இருந்தால் நீங்கள் உஷாராகி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் அல்லது அங்கீகார நடைமுறைக்காக ஒருவரின் அடையாளத்தை சரி பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள், உங்களிடம் உள்ள ஆதார் போலியானதா என்ற சந்தேகம் இருக்கிறது என்றால் இந்த வசதி பயன்படுத்துங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலவசம் தான் இதற்கு ஒரு சில நொடிகளே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications