இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், பணவீக்கத்தை கணக்கிட்டு தனது நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தை குறைத்து வருகிறது. இப்படி குறைக்கப்பட்ட வட்டியை முறையாக வங்கிகள் அதன் வாடிக்கையாளராகிய மக்களுக்கு குறைத்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு பலன் அளிக்கும். ஆனால் பல வங்கிகள் பல்வேறு காரணத்திற்காக கடனுக்கான வட்டியை குறைக்காமல் தொடர்ந்து அதிகப்படியான ஈஎம்ஐ தொகையை வசூல் செய்து வருகிறது.
கடந்த வாரம் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக அறிவித்தது. இதன் மூலம் ஆர்பிஐ 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1.25 சதவீத ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றின் EMIயை குறைக்கும்.
ஆனால் கடன் வாங்கியவர்களில் பலர் இன்னும் EMI குறையவே இல்லை என புலம்பி வருகின்றனர். இதற்கு பல காரணம் உண்டு, உதாரணமாக கடன் வகை, வங்கியின் கொள்கை, கடனின் ஆபத்து அளவை பொருத்து மார்ஜின் அளவில் செய்யப்படும் மாற்றம் என பல காரணங்கள் உள்ளது. இதை முழுமையாக தெரிந்துக்கொண்டால் மட்டுமே உங்கள் கடனுக்கான வட்டியை குறைத்து ஈஎம்ஐ தொகையில் சேமிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

பிக்ஸ்ட் ரேட் vs ப்ளோட்டிங் ரேட் கடன்
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வங்கிகள் மக்களுக்கு இரண்டு வகையில் கடன்களை வழங்கி வருகிறது. அவை பிக்ஸ்ட் ரேட் மற்றும் ப்ளோட்டிங் ரேட்.
இதில் பிக்ஸ்ட் ரேட் கடனில், வட்டி விகிதம் கடன் காலம் முழுவதும் மாறாது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்தாலும் இதில் EMI மாறாது. ஆனால் ப்ளோட்டிங் ரேட் கடனில் வட்டி விகிதம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ரெப்போ விகிதம் குறைந்த உடன் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்குள் வட்டி விகிதம் குறைக்கப்படும். இதன் வாயிலாக ஈஎம்ஐ தொகையும் குறையும்.
வட்டி விகிதத்தில் இருக்கும் வித்தியாசம்
அக்டோபர் 2019க்குப் பிறகு பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கடன்களை ரெப்போ லிங்க்ட் (RLLR அல்லது EBLR) அடிப்படையில் தான் வழங்குகிறது. இதில் ரெப்போ வட்டி விகிதத்தில் குறைப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே பிரதிபலிக்கும்.
ஆனால் பழைய கடன்கள் MCLR அல்லது பேஸ் ரேட் உடன் இணைக்கப்பட்டிருக்கலாம். இவற்றில் வங்கிகள் விகிதத்தை குறைப்பது கட்டாயமில்லை. ஆனால் பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தை இழக்க கூடாது என்பதற்காக குறைக்கின்றன. சில நேரத்தில் வங்கிகளின் லாப அளவுகளை கணக்கில் கொண்டு வட்டி குறைப்பை அறிவிக்காமலும் இருக்கலாம். இந்த நேரத்தில் தான் மக்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
EMI குறையாததற்கு காரணங்கள்:
வங்கிகள் ரெப்போ குறைப்பை உடனடியாகவும், முழுமையாகவும் எப்போதும் மக்களுக்கு கடத்துவதில்லை. வங்கியின் கடன் ரிஸ்க் பிரீமியம், ஆப்ரேட்டிங் செலவு, நிதி செலவு போன்றவற்றை கருத்தில் கொண்டு தாமதப்படுத்தலாம் அல்லது குறைவான அளவில் வட்டியை குறைக்கலாம்.
மக்கள் செய்ய வேண்டியது
நீங்கள் எந்த லோன் வாங்கியிருந்தாலும் சரி ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட பின்பு உங்களுடைய கடனுக்கான EMI குறையாவிட்டாலோ அல்லது கடன் காலம் குறையாவிட்டாலோ முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கடன் ஆவணத்தை சரிபார்த்து தான்.
இந்த ஆவணத்தில் நீங்கள் வாங்கிய கடன் எந்த வட்டி வகையின் கீழ் இருக்கிறது (பிக்ஸ்ட் ரேட் vs ப்ளோட்டிங் ரேட்) என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

புகார் தான் முதல் படி
உங்களுடைய கடன் ப்ளோட்டிங் ரேட் இருந்து ஈஎம்ஐ அல்லது கடன் காலம் குறையலில்லை எனில் முதலில் உங்கள் வங்கிக்கு கடன் கணக்கு விவரங்களுடன் மின்னஞ்சல் அல்லது கடிதம் எழுதுங்கள். இல்லையெனில் வங்கி மேலாளரிடம் நேரில் சென்று பிரச்சனை குறித்து பேசலாம். பொதுவாக இந்த கட்டத்திலேயே பிரச்சனை சரி செய்யப்படும்.
குறிப்பாக புதிதாக கடன் வாங்கியவர்கள் ஒரு வருட காலம் முடிந்திருந்தல், கட்டாயம் வங்கிக்கு சென்று ரெப்போ விகிதம் அடிப்படையில் குறைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வங்கிக்கு ஈமெயில் மூலம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 30 நாட்களுக்குள் கிரீவன்ஸ் ரெட்ரெஸல் ஆபீசருக்கு (Grievance Redressal Officer) புகார் அளிக்கலாம். அல்லது RBIயின் பேங்கிங் ஒம்புட்ஸ்மேன்-க்கு செல்லலாம். RBIயின் காம்ப்ளெயின்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (CMS) இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கலாம். இது வங்கிகள், NBFCகளுக்கு எதிராக புகார் செய்ய உதவும் ஒரு தளம்.
பழைய கடன்
அடுத்தாக உங்களுடைய பழைய கடன் MCLR அல்லது பேஸ் ரேட் கடனை அதாவது பிக்ஸ்ட் ரேட் அடிப்படையில் இருந்தால் ரெப்போ லிங்க்டு கடனாக மாற்ற வங்கியிடம் கோரலாம். பெரும்பாலான வங்கிகள் சிறிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு இதை செய்யும்.
வங்கிகள் இதை செய்ய மறுத்தால், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வேறு வங்கியில் உங்களை கடனை மாற்றி ரீபைனான்ஸ் முறையை பின்பற்றலாம். வேறு வங்கிக்கு மாற்றுவது மூலம் தற்போதைய ரெப்போ விகித அடிப்படையில் கடனை அப்டேட் செய்ய முடியும், இதன் மூலம் ஈஎம்ஐ-யும் குறையும்.
இத்தகைய எளிய நடவடிக்கை மூலம் ரெப்போ விகித குறைப்பு பலனை முழுமையாக பெறலாம். இதேபோல் ப்ளோட்டிங் ரேட் அடிப்படையிலான கடனில் ஆர்பிஐ வட்டியை உயர்த்தும் போது தானாக கடனுக்கான வட்டியும் உயரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications