சென்னை: இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர் . வெளி மாநிலத்திற்கும், வெளி மாவட்டத்திற்கும் ரயில்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய பயணிகள் பெரும்பாலும் ஒரு விஷயத்தை தவிர்த்து விடுவார்கள் . அது தான் டிராவல் இன்சூரன்ஸ் எனப்படும் பயண காப்பீடு.
45 பைசாவுக்கு பயண காப்பீடு: இந்திய ரயில்வே துறையை பொறுத்தவரை 45 பைசாவிற்கு இந்த பயண காப்பீடை நமக்கு வழங்கிறது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரயில் பயண காப்பீடு எப்படி செயல்படுகிறது என்ற விளக்கத்தை தந்திருக்கிறார், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், இந்திய குடிமக்கள் ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் அல்லது ஆர்ஏசி டிக்கெட் ஆக இருக்கும்போது கட்டணம் செலுத்தும் சமயத்தில் ஆப்ஷனல் டிராவல் இன்சூரன்ஸ் ஸ்கீம் எனப்படும் ரயில் பயண காப்பீடு திட்டத்தை பெறுகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்படும்.

45 பைசா பிரீமியத்தில் இன்சூரன்ஸ்: இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு 45 பைசா தான் பிரீமியம் தொகை . ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய பயணிகள் இந்த இன்சூரன்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கிறார். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் தேவைப்பட்டால் இந்த பயணக் காப்பீடு திட்டத்திற்கு அனுமதி தரலாம். இவ்வாறு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் டிராவல் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதற்காக 45 பைசாவை பிரிமியமாக டிக்கெட் கட்டணத்துடன் செலுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார் .
ஆன்லைன் டிக்கெட் பதிவில் கிடைக்கும்: ஒரு பயணிக்கு அந்த ஒரு பயணத்திற்கு 45 பைசா பிரீமியத்தில் பயண காப்பீடு கிடைக்கிறது, அனைத்து வரிகளும் சேர்ந்து வெறும் 45 பைசா மட்டுமே செலுத்தினால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பான தகவல்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும் நேரடியாக காப்பீடு நிறுவனத்திடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு விடும் என தெரிவித்திருக்கிறார்.
பாலிசி விவரம்: இதனை அடுத்து பயணிகள் அந்த காப்பீடு நிறுவனம் அனுப்பிய படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் முக்கியமாக நாமினியை நியமன்ம் செய்ய வேண்டும். இதன் பின்னர் பாலிசி ஆவண விவரங்கள் உங்கள் போனுக்கு வந்துவிடும். ரயிலில் எதிர்பாராத விபத்து நேரிட்டால் இந்த இன்சூரன்ஸ் பணத்தை கிளெய்ம் செய்து கொள்ள முடியும் என ஐஆர்சிடிசி இணையதளம்.
என்னென்ன நிகழ்வில் இன்சூரன்ஸ் கிடைக்கும்: 45 பைசா இன்சூரன்ஸை பொறுத்தவரை 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ரயிலில் ஏதேனும் விபத்து நேர்ந்து விட்டது அல்லது ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கை நடந்து விட்டது, வன்முறை நிகழ்கிறது ,வேண்டுமென்றே யாரேனும் தீ வைத்து விட்டார்கள் அல்லது மிகப்பெரிய திருட்டு நடந்து விட்டது என்பன உள்ளிட்ட நிகழ்வுகளின் போதெல்லாம் இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்து கொள்ளலாம்.
எவ்வளவு காப்பீடு கிடைக்கும்: பயணிக்கு இறப்பு நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை அவரது நாமினிக்கு வழங்கப்பட்டு விடும். பயணிக்கு நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டாலும் 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை கிடைத்துவிடும். பகுதியளவு உடல் குறைபாடு ஏற்பட்டால் 7,50,000 ரூபாய் காப்பீடு கிடைக்கும் . காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக என 10,000 ரூபாய் காப்பீடாக வழங்கப்படும்.
இதுவரை ரூ.27 கோடி செட்டில்மெண்ட்: காப்பீடு தொகை கோருவது, விண்ணப்பம் செய்வது, காப்பீட்டை பெறுவது உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றமும் பயணியிடமிருந்தோ அல்லது அவருக்கு சம்பந்தப்பட்டவரிடம் இருந்தோ நேரடியாக காப்பீடு நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். இதில் ரயில்வேத்துறை தலையிடாது என ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் 333 கிளைம்கள் செட்டில் செய்யப்பட்டிருப்பதாகவும் 27.22 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களால் பயணிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications