சென்னை: நம் அனைவருக்கும் வாழ்வில் பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். பிள்ளைகளின் கல்வி, சொந்த வீடு, ஓய்வுகால ஊதியம் என நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகள் இருக்கலாம். இதுபோன்ற கனவுகளை நிறைவேற்ற நிதி திட்டமிடல் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்றவை என்றாலும், குறுகிய கால இலக்குகளுக்கு பணத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இந்தக் கட்டுரையில், பங்கு முதலீடுகளின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றியும், குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் காண்போம்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான டீனா ஷா ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டி உள்ளார். தற்போது அவர் தன்னுடைய வருமானத்தை ஈக்விட்டி ஃபண்டுகளில் இருந்து ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளார். தனது மகளின் கல்லூரி கல்விக்கு இன்னும் 3 ஆண்டுகளே உள்ள நிலையில் லாபத்தை பத்திரப்படுத்தி பங்குகளில் இருந்து பணத்தை FD-களுக்கு மாற்றுவதாக டீனா தெரிவித்துள்ளார்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அள்ளித் தரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தாலும், உங்களுடைய நிதி இலக்குகள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இருந்தால், முதலீடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட மார்ச் 2020-ஆம் ஆண்டு, பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவைக் கண்டது. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், உங்கள் முதலீட்டை அவை பெரிதும் பாதிக்கலாம். அதிக லாபம் கிடைத்தாலும் இது போன்ற ஆபத்துக்கு அந்த லாபம் ஈடாகாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
டீனா சீக்கிரமே முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார். இதனால் சுமார் ரூ. 2 கோடி கார்ப்பஸை அவர் உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய மகள் 6 வயதாக இருக்கும்போதே, லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ. 5000 SIP முதலீட்டை செய்யத் தொடங்கி இருக்கிறார். பின்னர் அவர் போர்ட்ஃபோலியோவில் பிளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டுள்ளார். நீண்ட கால இலக்குக்காக சேமிக்கும் போது முன்கூட்டியே முதலீடு செய்வதன் நன்மைகளை கணிக்க முடியாது. ஆனால் கூட்டு வட்டியின் மூலம் நீண்ட கால முதலீடு நல்ல லாபத்தை வழங்கும்.
முதலீட்டு காலம் அதிகமாக இருக்கும் போது கூட்டு வட்டியின் வருமானத்தையும், அதிகமாக பெற முடியும். தாமதமாக முதலீடு செய்ய ஆரம்பித்தால் இறுதியில் கிடைக்கும் கார்பஸ் குறைவாக இருக்கலாம். இதனை தெரிந்து கொண்ட டீனா ஒவ்வொரு ஆண்டும் SIP முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை அதிகரித்து முதலீடு செய்துள்ளார்.
"எனது வருமானம் அதிகரித்து, என்னுடைய நம்பிக்கையும் அதிகரித்தது. இதனால் ஈக்விட்டி பண்டுகளில் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கினேன்", என்று டீனா கூறியுள்ளார். இதன் மூலம் SIP முதலீடு டீனாவுக்கு 2015-ஆம் ஆண்டில் ரூ. 5000 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது ரூ. 35,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கல்விச் செலவுகள் ஆண்டுக்கு 10-12% என்ற அளவில் வேகமாக அதிகரித்து வருகின்றன. உண்மையில், சுகாதாரப் பாதுகாப்புக்குப் பிறகு, சராசரி குடும்ப பட்ஜெட்டில் கல்வி செலவே, அதிகமாக செய்யப்படும் செலவுகளில் ஒன்றாக உள்ளது.
நொய்டாவை சேர்ந்த தம்பதியினரான மரியா மற்றும் சித்வான் டோக்ரா ஆகியோர், தங்கள் மகளின் கல்விக்காக FD-களில் முதலீடு செய்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் ஒரு நிதி ஆலோசகரை சந்தித்துள்ளனர். அதன்படி அவர்கள் சேமிப்பில் ஈட்டப்படும், 7 சதவீத ஆண்டு வருமானத்தை வைத்து அவர்களுடைய இலக்கை அடைய முடியாது என்று அந்த நிதி ஆலோசகர் அந்த தம்பதியினரிடம் கூறியுள்ளார்.
அவர்களின் மகள் கல்லூரிக்கு தயாராகும்போது தேவைப்படும் தொகை 13 ஆண்டுகளில் சுமார் ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 3.5 கோடியாக இருக்கலாம். எனவே அந்த நிதி ஆலோசகர் நொய்டா தம்பதியினருக்கு சொத்துக்களில் முதலீடு செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். குழந்தைக்கான கல்வி இலக்கை அடைய இன்னும் 13 ஆண்டுகள் உள்ளன.
எனவே ஈகிவிட்டி ஃபண்டுகளில் 80 சதவீத தொகையையும், மீதமுள்ள 20 சதவீதத்தை மட்டும் FD-களில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி இந்த தம்பதியினர் தங்கள் மகளின் கல்லூரி செலவுகளுக்காக ஈக்விட்டி மற்றும் ஹைபிரிட் பண்டுகளில் SIP முதலீடு செய்யத் தொடங்க இருக்கின்றனர்.
வெளிநாட்டு கல்வி: இதுவே உங்களுடைய மகன் அல்லது மகள் வெளிநாட்டு கல்வி கற்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டாலோ அல்லது நீங்கள் ஆசைப்பட்டாலோ, அதற்கான செலவுகள் இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க டாலர் ரூபாய்க்கு எதிராக சுமார் 20% உயர்ந்துள்ளது, சராசரியாக ஆண்டுக்கு 3.5%-திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது.
இந்த வெவ்வேறு நபர்களின் வெவ்வேறு வகையான முதலீடுகளில் இருந்து நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள முடியும் அது என்னவென்றால் உங்களுடைய நிதி இலக்குகள் நீண்ட காலத்திற்கு அப்பால் இருந்தால் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். அதுவே உங்களுடைய இலக்குகள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இருந்தால், FD திட்டங்கள் அல்லது பிற வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications