இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது . இந்த வங்கியை பொறுத்தவரை தன்னுடைய எஸ்பிஐ அறக்கட்டளை வாயிலாக மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் எனப்படும் ஊக்க தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
எஸ்பிஐ ஸ்காலர்ஷிப்: ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு இப்படி ஒரு ஸ்காலர்ஷிப் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக எஸ்பிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களில் தொடங்கி முதுநிலை பட்டப்படிப்பு பயிலக்கூடிய மாணவர்கள் வரை இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து ஊக்கத்தொகை பெற முடியும்.

கடைசி தேதி: இந்த ஆண்டு மொத்தம் 23 ,230 மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக எஸ்பிஐ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 15000 ரூபாய் தொடங்கி 20 லட்சம் ரூபாய் வரை இந்த ஸ்காலர்ஷிப் என்பது கிடைக்கும் என எஸ்பிஐ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் நவம்பர் 15ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் எஸ்பிஐ நிறுவனம் கூறுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: எஸ்பிஐ பிளாட்டினம் ஜூப்ளி ஆண்டு கொண்டாடுவதால் இப்படி ஒரு உதவி தொகை திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலக்கூடிய பள்ளி மாணவர்கள் , யுஜி மற்றும் பிஜி படிக்கக்கூடிய கல்லூரி மாணவர்கள் , ஐஐடி மற்றும் ஐஐஎம் இல் படிக்கக்கூடிய ஸ்காலர்கள் விண்ணப்பம் செய்யலாம் . மருத்துவம் பயிலும் மாணவர்கள் , வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்.
குடும்ப வருமானம்: இவர்கள் கட்டாயம் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் ஆண்டு இறுதி தேர்வில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் . இவர்களின் குடும்பத்தின் வருமானம் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு குடும்ப வருமானம் 6 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும் .
எத்தனை ஆண்டுகள்: படிப்பை தொடங்கி அந்த குறிப்பிட்ட படிப்பை முடிக்கும் வரையிலான அனைத்து ஆண்டுகளுக்கும் இந்த ஸ்காலர்ஷிப் என்பது வழங்கப்படும் என எஸ்பிஐ தெரிவிக்கிறது. மாணவர்கள் ஒரு உயர்நிலை படிப்பை தொடங்கி அதனை முழுவதுமாக முடிப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஸ்காலர்ஷிப்பை வழங்குவதாக கூறி இருக்கிறது .
எப்படி விண்ணப்பம் செய்வது: இதற்கு https://www.sbiashascholarship.co.in/ என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 12ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை ஸ்காலர்ஷிப் தொகை கிடைக்கும் கல்லூரி படிப்பு படிப்பவர்களுக்கு அவர்களின் படிப்பு ஏற்ற வகையில் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது .
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications