எஸ்பிஐ வாட்ஸ் அப்பில் இப்படியொரு ஆப்சன் உண்டா.. உடனடி சேவையா.. என்னென்ன சேவை கிடைக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), தனியார் வங்கிகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு வசதிகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு அப்டேட்களை செய்து வருகின்றது.

 

இதனால் வாடிக்கையாளர்கள் சில சேவைகளை எளிதில் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் சில சேவைகளை அளித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மூத்த குடிமக்களுக்கு எளிதில் பென்சன் ஸ்லிப்பினை பெற வழிவகை செய்துள்ளது.

வீட்டிற்கு வந்தே சேவை

வீட்டிற்கு வந்தே சேவை

பொதுவாக மூத்த குடிமக்களுக்கு என பல வகையான சேவைகளை, அஞ்சலகம் தொடங்கி பல வங்கிகளும் வீட்டிற்கு வந்து சேவை வழங்கி வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்த சேவைக்கு எந்த விதமாக கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதெல்லாம் சரி இந்த சேவையை எப்படி பெறுவது? வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி பெறுவது?

எப்படி பெறுவது?

வாட்ஸ் அப்பில் Hi என்ற மெசேஜினை 9022690226 என்ற எண்ணுக்கு அனுப்பவும். ஹாய் என்ற மெசேஜினை அனுப்பும்போது மூன்று ஆப்சன்கள் கொண்ட மெசேஜ் வரும். வங்கி இருப்பு குறித்து விவரம், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பென்சன் ஸ்லிப் என்ற ஆப்சன்கள் வரும். இதில் பென்சன் ஸ்லிப் என்ற ஆப்சனை கொடுக்கும்போது உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கே பென்சன் ஸ்லிப் வரும்.

எஸ்பிஐ வாட்ஸ் அப் பேங்கிங் சேவை
 

எஸ்பிஐ வாட்ஸ் அப் பேங்கிங் சேவை

வாட்ஸ் அப்பில் வங்கி கணக்கில் வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் சேவையினையும் வாட்ஸ் அப் மூலம் பெறலாம். இந்த சேவையினை பெறுவதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக வாடிக்கையாளர்களுக்கு 7208933148 என்ற எண்ணுக்கு WAREG என்று எஸ்எம்எஸ் அனுப்பவும். இந்த எஸ் எம் எஸ்ஸினை உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும்.

 எளிதில் சேவையை பெறலாம்

எளிதில் சேவையை பெறலாம்

இந்த பதிவினை வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, நீங்கள் எஸ்பிஐயில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு மேசேஜினை பெறுவீர்கள்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக 9022690226 என்ற எண்ணிற்கு Hi என்ற மெசேஜினை அனுப்பவும். அதன் பிறகு இந்த சேவையினை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். வங்கி ஸ்டேட்மென்ட் தொடங்கி, பேலன்ஸ் இருப்பு என பலவற்றையும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைனில் சேவை

ஆன்லைனில் சேவை

முன்பெல்லாம் இதுபோன்ற வங்கி சேவைகளை பெற வங்கிகளுக்கு நடையாய் நடக்க வேண்டி இருக்கும். ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்க வேண்டும் என்றால் கூட, வங்கிக்கு சென்று கடிதம் எழுதிக் கொடுத்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி இல்லை. அத்தியாவசிய தேவை தவிர, பல தேவைகளை ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

பயனுள்ள சேவை

பயனுள்ள சேவை

பண பரிவர்த்தனையிலும் யுபிஐ மூலம் இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்ளலாம். இன்று சாதாரணமாக ஒரு டீக்கடையில் கூட யுபிஐ மூலம் சேவை பெறலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதுபோன்ற டிஜிட்டல் சேவைகள் மிக பயனுள்ள ஒன்றாக அமையலாம்.

 

எஸ்பிஐ வாட்ஸ்அப்பில் இருந்து வங்கி இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட், பென்சன் ஸ்லிப் என பலவற்றையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த விதமாக கட்டணமும் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

SBI whatsapp banking services:What services are available, how to get it?

Now You can also get bank balance, mini statement, pension sleep etc. from SBI WhatsApp. There is no charge for this
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X