வருமான வரி சேமிப்பு திட்டமிடல் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது 80C பிரிவு தான். ஆனால் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமும் நாம் வருமான வரி விலக்கு பெற முடியும். இந்திய வருமான வரி சட்டத்தின் 80CCD பிரிவின் கீழ் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
பிரிவு 80CCD: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டமான தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS) அல்லது அடல் பென்சன் திட்டத்தில் தனிநபர் மேற்கொண்ட பங்களிப்புக்காக வரி விலக்கு அளிக்கும் பிரிவு இது. அதாவது NPS திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் வரி சலுகை பெற முடியும்.

80CCDஇன் உட்பிரிவுகள்:
1) 80CCD (1): தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தனிநபர் ( ஊழியர்/ சுய தொழில் புரிவோர்) மேற்கொண்ட பங்களிப்புக்கான வரி விலக்கு
2) 80CCD (2): வேலை வழங்கிய முதலாளி தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மேற்கொண்ட பங்களிப்புக்கான வரி விலக்கு
பிரிவு 80CCD(1):
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு /தனியார் ஊழியர் அல்லது சுயதொழில் செய்பவர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்த பங்களிப்பை காட்டி இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.
80CCD (1) பிரிவின் முக்கிய விதிமுறைகள்:
ஊழியர்கள்: ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச விலக்கு, முந்தைய ஆண்டில் அவர்களின் ஊதியத்தில் (BASIC + DA)10% ஆகும்.
சுயதொழில்:சுயதொழில் புரிவோருக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச விலக்கு முந்தைய ஆண்டில் அவர்களின் மொத்த வருமானத்தில் 20% ஆகும்.
80CCD(1) இன் கீழ் விலக்குகளின் அதிகபட்ச வரம்பு ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் ஆகும்.
80CCD(1) பிரிவின் கீழ் கிடைக்கும் விலக்குகளுக்கு மேலதிகமாக 80CCD(1B) என்ற உட்பிரிவின் கீழ் ஊழியர்கள் கூடுதல் வரி சலுகைகளை கோர முடியும்.
அதாவது 80CCD(1B) பிரிவில் ரூ.50,000 கூடுதலாக வரி விலக்கு பெற முடியும். எனவே, 80CCDயின் கீழ் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச வரி விலக்கு ரூ.2 லட்சம் ஆகும்.
பிரிவு 80CCD(2):
பிரிவு 80CCD(2) பிரிவின் கீழ் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பெயரில் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு மீது வரி விலக்கு கிடைக்கிறது. PPF, EPF ஆகியவற்றுடன் கூடுதலாக ஒரு நிறுவனம் ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்யலாம். முதலாளியின் பங்களிப்பு ஊழியரின் பங்களிப்புக்கு சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ இருக்கலாம்.
இந்த பிரிவின் கீழ் மத்திய அரசு அல்லது மாநில அரசு நிறுவனங்கள் வாயிலாக ஊழியர்கள் பெற கூடிய அதிகபட்ச வரி விலக்கு வரம்பு : அவர்களின் ஊதியத்தில் (BASIC + DA ) 15%
தனியார் நிறுவனங்களாக இருப்பின் ஊதியத்தில்(BASIC + DA ) அதிகபட்சமாக 10% விலக்கு பெற முடியும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான நிபந்தனைகள்:
வருமான வரி விலக்கு பெற TIER 1 கணக்கில் ஒருவர் குறைந்தது ஆண்டுக்கு ரூ.6000 அல்லது மாதத்திற்கு ரூ.500 பங்களிப்பு செய்திருக்க வேண்டும்
TIER 2 கணக்கில் குறைந்தது ஆண்டுக்கு ரூ.2,000 அல்லது மாதத்திற்கு ரூ.250 பங்களிப்பு செய்திருக்க வேண்டும்
80CCD சிசிடி பிரிவின் கீழ் கோரப்பட்ட வரிச் சலுகைகளை மீண்டும் 80C பிரிவின் கீழ் கோர முடியாது. எளிமையாக கூற வேண்டுமானால் பிரிவு 80C மற்றும் பிரிவு 80CCD இன் கீழ் இணைக்கப்பட்ட விலக்கு ரூ.2 லட்சத்தை தாண்ட கூடாது.
தேசிய ஓய்வுதிய திட்டம் உங்கள் ஓய்வுக்காலத்திற்கான நிதியை சேமிப்பது மட்டுமின்றி நிகழ் காலத்தில் வருமான வரி சலுகைகளையும் பெற்று தருகிறது.
More From GoodReturns

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய வருமான வரி சட்டம்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மாற்றங்கள்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications