நமது சொந்த வீடு கனவை நனவாக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டு கடன்களை வாரி வழங்குகின்றன. இந்த கடனை வட்டியுடன் கணக்கிட்டு மாதந்தோறும் இஎம்ஐ செலுத்துகிறோம். இப்படி செலுத்தக்கூடிய தொகைக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை கிடைக்கிறது. அதனை பெறுவதற்கான நிபந்தனைகள் என்னென்ன?
பிரிவு 80EE: வருமான வரி சட்டத்தின் பிரிவு 80EE, முதன்முறையாக வீடு வாங்கி இருப்பவர்கள் அதற்காக பெற்ற கடனுக்கு செலுத்தி வரும் வட்டி தொகைக்கு கூடுதலாக ரூ.50,000 வரிச் சலுகை வழங்குகிறது.

பிரிவு 24B மற்றும் பிரிவு 80EEக்கு உள்ள வித்தியாசம்:
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24B-இல் , வீட்டுக் கடனுக்கான வட்டி தொகைக்கு ஓர் நிதியாண்டில் ரூ.2 லட்சம் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. உங்கள் வருமான வரி கணக்கில் பிரிவு 24B இல் ரூ. 2 லட்சத்தை வீட்டு கடன் வட்டித் தொகையாக கழித்த பின்னரும் உங்களால் கூடுதலாக ரூ.50,000 வரி விலக்கு பெற முடியும். இதற்கென உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவு தான் 80EE.
2013-14ஆம் நிதியாண்டில் தான் இந்த பிரிவு அமலுக்கு வந்தது. 2013-14 மற்றும் 2014-15ஆம் நிதியாண்டுகளில் மட்டுமே இது அமலில் இருந்தது. பின்னர் 2016-17இல் மீண்டும் கொண்டு வரப்பட்டது, அப்போது ஒரு ஆண்டுக்கு பெற கூடிய வரி விலக்கு ரூ.50,000 என மாற்றப்பட்டது.
பிரிவு 80EE நிபந்தனைகள்:
கடந்த ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2017 வரை பெற்ற வீட்டு கடன்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
முதன்முறையாக வாங்கிய வீட்டுக்கான கடனாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. அதாவது வீட்டுக்காக வங்கி கடன் வாங்கிய தேதியில், கடன் பெற்ற நபருக்கு வேறு எந்த வீட்டு மனையும் சொந்தமாக இருந்திருக்க கூடாது
வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டக் கூடாது, கடன் வாங்கிய தொகை ரூ.35 லட்சத்தை தாண்டக் கூடாது.
ஒரு நிதியாண்டில் இந்த வரிச் சலுகையை முழுமையாக பெறவில்லை எனில் அடுத்தடுத்த ஆண்டுகளில் சேர்த்து கோரலாம். 8 ஆண்டுகள் வரை தொகையை கூட்டி வரிச் சலுகை பெற முடியும்.
வரி செலுத்தும் தனிநபர் மட்டுமே இந்த பிரிவை பயன்படுத்த முடியும், பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினரோ அல்லது நிறுவனங்களோ பெற முடியாது
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வீட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கி இருக்க வேண்டும்
உதாரணம்:
அருண் என்பவர் கடந்த டிசம்பர் 2016இல் முதன்முறையாக ஒரு வீடு வாங்கி இருக்கிறார். 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கு அவர் ரூ. 30 லட்சம் வங்கி கடன் பெற்றிருக்கிறார். இதற்காக மாதந்தோறும் ரூ.35,000 அவர் இஎம்ஐ செலுத்தி வருகிறார். ரூ.35,000ஐ வங்கியானது வட்டி தொகை மற்றும் அசல் தொகை என பிரித்து கொள்கிறது.
இதில் வட்டி மட்டும் ரூ.25,000 என வைத்து கொண்டால் ஓர் நிதியாண்டில் அவர் வட்டியாக செலுத்தும் தொகை ரூ.3 லட்சம். அவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது , பிரிவு 24B இல் ரூ.2 லட்சம் வரை விலக்கு கோருகிறார். அவர் பிரிவு 80EE- ஐ பயன்படுத்தி கூடுதலாக ரூ.50,000 விலக்கு கோர முடியும்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications