வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்கு இந்திய வருமான வரி சட்டத்தில் சிறப்பு பிரிவு உள்ளது. நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். பொதுவாக நிறுவனங்கள் , ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் HRA எனப்படும் HOUSE RENT ALLOWANCE சேர்ந்தே இருக்கும்.
உங்களது PAY SLIP இல் இந்த தகவல் இருக்கும். ஒருவேளை உங்கள் நிறுவனம், HRA வழங்குவதில்லை, என்றாலும் நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகைக்கு வரி விலக்கு கோர முடியும். அதற்கு வழிவகை செய்யும் 80GG பிரிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

80GG பிரிவில் வரி விலக்கு பெறுவது எப்படி?: நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கு இந்த பிரிவு பொருந்தும். உங்கள் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் நீங்கள் இருந்தால் கூட இந்த பிரிவில் விலக்கு கோரலாம்.
ஆனால் பெற்றோரிடம் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி வாடகை செலுத்துவது கட்டாயம், அது பெற்றோரின் வருமான வரி கணக்கில் சேர்க்கப்படும்.
ஒரே நிதியாண்டில் 2 நிறுவனங்களில் பணி செய்திருந்தால்?: நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்கு அந்த நிதியாண்டு முழுவதும் HRA வழங்கவில்லையெனில் நீங்கள் தொழில் செய்யும் ஊரில் உங்களுக்கோ, உங்கள் மனைவிக்கோ, குழந்தைக்கோ சொந்தமான எந்த ஒரு குடியிருப்பும் இருக்க கூடாது.
வாடகை செலுத்துவது தொடர்பாக படிவம் 10BAஐ சமர்பிக்க வேண்டும்
உங்களது வாடகை தொகை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டினால் உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஒருவேளை அந்த நிதியாண்டில் முதல் 3 மாதங்கள் ஒரு நிறுவனத்தில் பணி செய்துள்ளீர்கள் அங்கே HRA வழங்கப்பட்டது, அதன் பின்னர் நீங்கள் வேறு நிறுவனத்தில் பணிக்கு சென்று அங்கே HRA வழங்கப்படவில்லை என்றாலும் நீங்கள் வரி விலக்கு பெற முடியாது. ஏனெனில் நிதியாண்டில் ஒரு மாதத்தில் கூட HRA பெற்றிருக்க கூடாது என்பதே நிபந்தனை.
படிவம் 10BA: 80ஜிஜி பிரிவில் வருமான வரிச் சலுகை பெறுவதற்கு படிவம் 10BA ஐ சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் குடியிருக்கும் இடம் உங்களுக்கு சொந்தமானது அல்ல என்பதை நிரூபிக்கும் சான்று இது.
1.வரி விலக்கு கோருபவரின் பெயர் மற்றும் பான் எண்
2. குடியிருக்கும் வீட்டின் முகவரி
3.வாடகைக்கு இருக்கும் காலம் மற்றும் வாடகைத் தொகை
4.வாடகை செலுத்தும் வழிமுறை(டிஜிட்டல், ரொக்கம் போன்றவை)
5.வீட்டு உரிமையாளரின் முகவரி, பெயர்
6. வாடகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால் உரிமையாளர் பான் எண்
இந்த படிவம் வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்.
சொந்த ஊரில் சொந்தமாக வீடு இருந்தால்..?
ஒருவேளை தமிழ்நாட்டில் உங்களுக்கு சொந்தமான வீடு இருக்கிறது. ஆனால் நீங்கள் டெல்லியில் வேலைக்கு செல்கிறீர்கள், அங்கே வாடகைக்கு வீடு எடுத்துள்ளீர்கள், உங்கள் நிறுவனம் HRA வழங்கவில்லை என்ற பட்சத்தில் நீங்கள் வரி விலக்கு கோர முடியும்.
எவ்வளவு வரி விலக்கு கிடைக்கும்?
1. மாதந்தோறும் ரூ.5,000 அதாவது ஆண்டுக்கு ரூ.60,000
2. மொத்த வருமானத்தில் 10% இருந்து வாடகை தொகை கழிப்பு
3. மொத்த வருமானத்தில் 25%
உதாரணத்திற்கு சுரேஷ் என்பவரின் ஆண்டு வருமானம் (அனைத்து விலக்குகளும் போக) ரூ.5 லட்சம் வைத்து கொள்வோம். அவர் வாடகை வீட்டில் இருக்கிறார், அவர் வேலை செய்யும் நிறுவனம் HRA வழங்கவில்லை. அவர் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை வாடகையாக செலுத்துகிறார் என்றால்,
நிபந்தனை 1இன் படி: ரூ.60,000 வரி விலக்கு
நிபந்தனை 2இன் படி: செலுத்திய வாடகை ரூ. 1.5 லட்சம் -50,000 (மொத்த வருமானத்தில் 10%)= ரூ.1 லட்சம்
நிபந்தனை 3இன் படி: மொத்த வருமானத்தில் 25% எனில் ரூ.1.25 லட்சம்
இந்த மூன்றில் எது குறைவான தொகையோ அதை கணக்கிட்டு வருமான வரி விலக்கு வழங்கப்படும். எனவே நிபந்தனை 1இன் படி ரூ.60,000 வரி விலக்கு கிடைக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications