அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியா பணம் எங்கிருந்து கிடைக்கிறது என யோசனை செய்ததுண்டா? பெரும்பாலும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலமே அரசியல் கட்சிகளுக்கான நிதி கிடைக்கிறது. இந்த தொகைக்கு 100% வரி விலக்கு அளிக்கும் பிரிவு தான் 80GGB.
வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GGB: இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி தங்களுக்கு பிடித்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்து நிறுவனங்கள் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வழிவகை செய்யும் ஒரு பிரிவு தான் 80GGB.

நிபந்தனைகள் என்னென்ன?
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே வரி விலக்கு கோர முடியும்.
நன்கொடை பெறும் அரசியல் கட்சி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
தேர்தல் அறக்கட்டளை என்பது நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 8இன் கீழ் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.
தேர்தல் அறக்கட்டளைகள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று , பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.
யாரெல்லாம் வழங்க முடியாது?
அரசு நிறுவனங்களால் நன்கொடை வழங்க முடியாது, அதே போல தொடங்கி 3 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிறுவனங்களும் வழங்க முடியாது. இதை தவிர இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பங்களிப்பு தரலாம்.
ரொக்கத்துக்கு அனுமதியில்லை:
அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி தொடர்பான விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட மிக முக்கியமான நிபந்தனைஇது. ரொக்கமாக தரும் பணத்திற்கு வரி விலக்கு கோர முடியாது. அதுவே காசோலை, வரைவோலை மற்றும் மின்னணு பரிமாற்றம் முறையில் பணம் அனுப்பி இருந்தால் வரிச் சலுகை பெற்றுக் கொள்ளலாம்.
என்னென்ன பொருந்தும்?
ஒரு அரசியல் கட்சி அல்லது வேறு அரசியல் நோக்கத்திற்காக மக்களின் ஆதரவை பெறக்கூடிய அல்லது மாற்றி அமைக்கக்கூடிய செயல்களில் ஈடுபடும் ஒரு நபருக்கு வழங்கப்படும் வணிக நன்கொடை அல்லது சந்தா.
அரசியல் கட்சிகள் சார்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாரிக்கப்படும் பிரசுரங்கள், விளம்பரங்களுக்காக ஒரு நிறுவனம் செலவழிக்கும் தொகை, அரசியல் கட்சிக்கு நேரடியாக வழங்காமல் அதன் நன்மைக்காக செலவு செய்யும் தொகை.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
நன்கொடைகளுக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை, ஆனால் நிறுவனங்கள் மொத்த லாபத்தில் (மூன்று ஆண்டுகள் சராசரி) 7.5% வரை நன்கொடை வழங்கலாம் என நிறுவனங்கள் சட்டம் கூறுகிறது. மேலும் அந்த நிறுவனம் லாபம் மற்றும் இழப்பு கணக்கில் இதனை நன்கொடை அளித்த அரசியல் கட்சி பெயருடன் கணக்கு காட்ட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளித்திருந்தால் , தொகையை மட்டுமெ குறிப்பிட்டால் போதும்.
ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமான தளத்தில் ஒரு நிறுவனத்தின் எந்தவொரு விளம்பரமும் பிரிவு 80GGB-இன் கீழ் பங்களிப்பாக கருதப்படும். அதாவது வரி விலக்குக்கு தகுதியுடையது.சமூக ஊடகங்கள் , பத்திரிகைகள் போன்றவையும் இதில் அடங்கும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நிறுவனமும் அவர்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடை அளிக்கலாம்.
ஒரு கட்சி என்று அல்லாமல் பல கட்சிகளுக்கு அளிக்கலாம், வருமான வரி தாக்கலின் போது அனைத்து தொகையும் கூட்டப்படும் நன்கொடை அளித்ததற்கு ரசீது, பெயர், முகவரி, PAN, TAN, பணம் , பணம் செலுத்திய முறை ஆகியவற்றை குறிப்பிட்டு வரி விலக்கு பெறலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications