இளங்கோ, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் நபர், அவருக்கென தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. அவர் தனக்கு பிடித்த அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்புகிறார்.
ஆனால் இது வருமான வரி கணக்கில் சிக்கலை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. சரி, எந்த வித சிக்கலும் இல்லாமல் அரசியல் கட்சிக்கு நன்கொடையும் அளித்து, வருமான வரி விலக்கும் கோருவது எப்படி என விரிவாக பார்க்கலாம்..

பிரிவு 80GGC: வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GGC, தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கு வரி விலக்கு அளிக்கிறது. அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் அறக்கட்டளைகளுக்கு தனிநபர்கள் நிதி பங்களிப்பு செய்வதை எளிதாக்கும் ஒரு பிரிவு தான் இது. அரசியல் கட்சிகளுக்கான நிதி வருகை மற்றும் செலவினம் ஆகியவற்றில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கவும் இந்த பிரிவு உதவுகிறது.
பிரிவு 80GGC-ல் நிறுவனங்கள் , உள்ளூர் அரசு அமைப்புகள் தவிர மற்ற தனிநபர்கள் அனைவரும் வரி விலக்கு கோர முடியும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே வரி விலக்கு கோர முடியும்.
நன்கொடை பெறும் அரசியல் கட்சி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்
தேர்தல் அறக்கட்டளை என்பது நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 8இன் கீழ் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்
தேர்தல் அறக்கட்டளைகள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று , பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.
100% வரி விலக்கு கிடைக்குமா?
ஒரு பதிவு செய்யப்பட்ட தேர்தல் அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு , தனிநபர் வழங்கும் நன்கொடையில் 100% வரி விலக்கு கோரலாம். ஆனால் மொத்த வரி விலக்கு என்பது அந்த தனி நபரின் மொத்த வருமானத்தை விட அதிகமாக இருக்க முடியாது .
பரிசுப் பொருளாக வழங்கினால்..
அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் அறக்கட்டளைகளுக்கு ரொக்கமாக அளிக்கப்படும் பங்களிப்புகள் அல்லது நன்கொடைகள் வரிவிலக்குகளுக்கு தகுதியற்றவை. இந்த திருத்தம் 2013 - 2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அதே போல பரிசு பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்காது.
உங்களது நன்கொடையை காசோலை, வரைவோலை மற்றும் மின்னணு பரிமாற்றம் ஆகிய வழிகளில் செலுத்தி இருந்தால் 100% வரி விலக்கு கிடைக்கும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
நன்கொடை அளித்ததற்கான ரசீது
ரசீதில் அரசியல் கட்சியின் பெயர், முகவரி, PAN, TAN ஆகியவை இருக்க வேண்டும்
பணம் செலுத்திய முறை, எவ்வளவு பணம் ஆகிய விவரங்களும் இடம்பெற வேண்டும்
பிரிவு 80GGBக்கும் பிரிவு 80GGCக்கும் உள்ள வேறுபாடு:
பிரிவு 80GGBஇல் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைக்கு விலக்கு கிடைக்கிறது , பிரிவு 80GGCஇல் தனிநபர் வழங்கும் அரசியல் சார்ந்த நன்கொடைகளுக்கு விலக்கு கிடைக்கிறது.
ஒரு வேளை நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்கு படிவம் 16ஐ வழங்குகிறது என்றால், நீங்கள் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற விவரத்தை வழங்கி படிவத்தில் சேர்க்க வேண்டும்.
அரசு ஊழியர்களும் நன்கொடை வழங்கலாமா?
நிச்சயமாக அரசு ஊழியர்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கலாம். ஆனால் அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இருக்க கூடாது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications